நா பிறழ் நெகிழ் சொற்றொடர் பயிற்சிகள் | Tongue Twisters in Tamil

FRONT DESK
8 Min Read
Tongue twisters in tamil

Tongue twisters in tamil

Tongue Twisters in Tamil

Tongue Twisters in Tamil: குழந்தைகளுக்கான குறுகிய நா பிறழ்வுகள் முதல் பெரியவர்களுக்கான நீண்ட மற்றும் கடினமான நாக்கு பிறழ்வுகள் வரை, இந்த தகவல்கள் உங்களுடைய தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த உதவும். மேலும், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள பல பிரபலமான Tongue twisters in tamil-ல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நா பிறழ்-Tongue Twisters in Tamil

ஒரே மாதிரியான உச்சரிக்கக்கூடிய சொற்களைக் கொண்ட வாக்கியம் தான் நாம் நா பிறழ் சொற்கள் என்று அழைக்கின்றோம். இதனை தான் அனைவரும் ஆங்கிலத்தில் Tongue Twister என்று கூறுகின்றனர். இந்த Tongue twister சொற்களை மிக வேகமாக சொல்வது மூலம் உங்களுக்கு நா பிறழ்வதை எளிமையாக தடுக்கலாம். இந்த நா பிறழ் சொற்களை நீங்கள் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சொல்லி பயிற்சி செய்து கொள்ளலாம்.

வார்த்தைகளை வரிசையாகச் சொல்லும் உங்கள் திறனை அவர்கள் வெறுமனே சோதிக்கலாம். மேலும் அவை அடிக்கடி உச்சரிக்க கடினமான வார்த்தைகளால் நிரம்பியிருப்பதால், அதைச் சொல்வதை விட இது எளிதாக இருக்கும். உங்கள் வார்த்தைகளை நீங்கள் தடுமாறத் தொடங்கும் முன் நீங்கள் எவ்வளவு சொல்லலாம் என்பதைப் பார்க்கவும். இந்த tongue twister-களைத் தொடங்குவதற்கு முன் உங்களுக்கு மூளையை மேம்படுத்த வேண்டும் என்றால், உங்கள் புத்திசாலித்தனத்தை சோதிக்கும் இந்த மூளை விளையாட்டுகளை முயற்சிக்கவும்.

இந்த கடினமான tongue twister-களை நீங்கள் எளிதாக்க விரும்பினால், முதலில் குழந்தைகளுக்கு இந்த tongue twister-களை முயற்சிக்கவும். நீங்கள் வாய் குழறாமல் நாக்கினைச் சுழட்டிக் கஷ்டப்பட்டுப் பேசுற வாக்கியங்களை ஆங்கிலத்தில் Toungue twisters என்று  சொல்ற தமிழ்ல ‘நா நெகிழ் சொற்றொடர்கள்’ அதிகமாக உள்ளது. அதில் சிலவற்றை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை  சத்தமா சொல்லி நாக்கை உருளவிடுவதால் நன்கு பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

நா பிறழ் நெகிழ் தமிழ் சொற்றொடர்கள் | Tongue twisters in tamil

 1. வாழைப்பழம் வழுக்கி ஏழைக்கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்
 2. கிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழத்தில்  வழுக்கி  விழுந்தான்
 3. ஓடற நரியில் ஒரு நரி கிழ நரி, கிழநரி முதுகுல ஒரு பிடி நிறைய மயிர்
 4. ஆனை அலறலோடு அலற அலறியோட
 5. சைக்கிள் ராலி போலொரு லாரி ராலி
 6. ப்ளூ லாரி உருளுது பிரளுது
 7. சொல்ல சொல்ல சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை சொல்ல சொல்ல சொந்தங்களும் எதுவும் இல்லை
 8. லாரி நிறைய இறாலு அதுல நாலு இறாலு நாறின இறாலு
 9. லோடு ரோலர் ரோடு ரோலர்
 10. மெத்தையில் இருந்த விழுந்த அத்தை வாய்ப் பொக்கையாக்கி மெத்தையில் கிடந்த அத்தையை பார்க்க வந்தான். அத்தை மகன் சொத்தை பலமுத்தையான்
 11. பழுத்த கிழவி கொழுத்த மழையில் வழுக்கி விழுந்தாள்
 12. கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்டமுட்ட கட்டமுட்ட
 13. ஷீலாவுக்கு சீக்கிரம் தேவை சீலை
 14. சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கல.
 15. யார் தச்ச சட்டை எங்க தாத்தா தச்ச சட்டை
 16. கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால்
 17. ரெண்டு செட்டு சோள தோசையில ஒரு செட்டு சோள தோசை சொந்த சோள தோசை
 18. தேவியும் கோபியும் கிளையில் தாவி ஏறி இறங்கி , இறங்கி ஏறி, ஏறி இறங்கி விளையாடினர்
 19. பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடுமாடு மூடு
 20. கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது

நா பிறழ் நெகிழ் சொற்றொடர்கள்-Tongue Twisters in Tamil

 1. ஒரு குடம் எடுத்து அறைகுடம் இறைத்து குறை குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கினான்
 2. பனைமரம் ஏறி பனங்காய் பறித்து தள்ளுவண்டி செய்து தள்ளிவிட்டு போனான்
 3. மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும் பெய்யா மெய்யா மழை
 4. பக்தியில முத்தின பக்தன் பக்தர்களை பத்துப் பத்து பேராக பந்திக்கு அழைத்தான்
 5. சொல்லவும் மெல்லவும் முடியாமல், அள்ளவும் மெல்லவும் முடியாமல், கொட்டவும் வெட்டவும் பிடிக்காமல் சட்டம் பேசின சிட்டை பார்த்து சிரித்த மொட்டையைக் காண மொட்டை மாடிக்கு சென்றேன்
 6. ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை தனிக்கிளை தனில வந்த கனிகளும் இனிக்கல
 7. கூட்டுக் களவாணிகள் கூட்டமாக கோட்டுப்போட்டு ஏட்டு வீட்டில் திறந்த பூட்டை புட்டுப் பூட்டிப் பூட்டிப் பார்த்தார்கள்
 8. சுத்தத்தை மறந்து சொந்தத்தை துறந்து பந்தத்திடன் இரந்து பணத்தை கரந்து பாதி வாழ்க்கையில் பரதேசியானான்
 9. வண்டி சிறியது வண்டிகாரன் புதிது வண்டிகாரன் புதியதால் வண்டி சாய்ந்தது
 10. ஏழைக்கிழவன் வாழைப்பழத்தோல் வழுக்கி சறுசறுக்கி வழுவழுக்கி கீழே விழுந்தான்
 11. உளிபெருகு சிலை அழகலை உலவு கடலழகு
 12. நம்ம தோசை நல்ல தோசை தச்சன் தோசை திஞ்ச தோசை
 13. வீட்டு கிட்ட கோரை வீட்டு மேல கூரை கூரை மேல நாரை
 14. ஒரு கை எடுக்கமறு கை கொடுக்க பிற கை மடக்க பல கை அடக்க வடக்கே போனான் கடுக்கன்
 15. தக்காளி தக்காளி  அக்கா  வாங்கின தக்காளி, தக்காளி தக்காளி அழுகின தக்காளி, தக்காளி தக்காளி அக்கா பார்க்காத தக்காளி,தக்காளி தக்காளி அருமையான தக்காளி
 16. காக்கா காக்கான்னு கத்திறனால காக்கானு பேரு வந்ததா இல்ல காக்கானு பெரு வந்ததினால காக்கா காத்துதா
 17. கல்லுமுள்ளு தாண்டி மெல்லவெல்ல ஏகும் நல்ல செல்ல பிள்ளையே நில்லு சொல்லு செல்லு
 18. கூவுற கோழி கொக்கர கோழி,கொக்கர கோழி கொழுகொழு கோழி கோழி கோழி குத்துற கோழி குத்துற கோழி கொக்கர கோழி கொக்கர கோழி சிக்குற கோழி சிக்குற கோழி திங்கிற கோழி
 19. ஏணி மேல கோணி கோணி மேல குண்டு, குண்டு மேல புல்லு,  புல்லுக்குள்ள பூச்சி எது என கேட்ட ஆச்சி விட்டது ஆயுள் மூச்சி
 20. புட்டும் புது புட்டு தட்டும் புது தட்டு புட்டை கொட்டிட்டு தட்டைத் தா

நா பிறழ் நெகிழ் சொற்றொடர்கள்-Tongue Twisters in Tamil

 1. கொடு போட்ட வீடு கோலம் போட்ட வீடு வேப்பமர சந்து வேணுகோபால் வீடு
 2. கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் பீரென குதித்து கும்மாளமிட்டன
 3. கும்பகோணக் குளக்கரையில் குந்தியிருக்கும் குரங்கை குப்பன் குச்சியால் குத்தியதால் குரங்கு குளக்கரையில் குதித்தது
 4. கரடி கருங்கரடி கரடி பொடனி கரும் பொடனி
 5. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை
 6. குலை குலையாய் வாழைப்பழம் மழையில் அழுகி கீழே விழுந்தது
 7. பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்த்த வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால், எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்த்த வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்

Also Read: Tongue Twisters in Tamil

நா பிறழ் நெகிழ் ஆங்கில சொற்றொடர்கள்: 

 1. Which wrist watches are Swiss wrist watchesநா பிறழ் நெகிழ் ஆங்கில சொற்றொடர்கள்
 2. Each Easter Eddie eats eighty Easter eggs
 3. Send toast ten tense stout saint ten tall tents
 4. Sheena leads, Sheila needs
 5. Top chopstick shops stock top chopsticks
 6. Selfish shellfish
 7. The great Greek grape grower grow great Greek grape
 8. Lesser leather never weathered wetter weather better
 9. The sixth sick sheik’s sixth sheep’s sick
 10. Thirty-three thirsty, thundering thoroughbreds thumped Mr. Thurber on Thursday
 11. Scissors sizzle, thistles sizzle
 12. Linda-Lou Lambert loves lemon lollipop lipgloss
 13. Near an ear a nearer ear a nearly erie ear
 14. Roberta ran rings around the Roman ruins
 15. He threw three free throws
 16. A happy hippo hopped and hiccupped
 17. Toy boat, Toy boat, Toy boat
 18. Synonym for cinnamon is cinnamon synonym
 19. Six sick hick nick six slick brick with pick and stick
 20. Rory the warrior Roger the worrier were reared wrong in rural brewery

நா பிறழ் நெகிழ் ஆங்கில சொற்றொடர்கள்:

 1. Betty big bunny bobbled by the blueberry bush
 2. Four furious friends fought for the phone
 3. Imagine imaginary menagerie manager managing imaginary menagerie
 4. Gobbling gargoyles gobbled gobbling goblins
 5. Many an anemone sees an enemy anemone
 6. If you notice this notice you notice that this notice is not worth noticing
 7. An ape hates grape cakes
 8. I saw kitten eating chicken in kitchen
 9. How many yaks could a yak pack pack if yak pack could pack yak
 10. Smelly shoes and socks shock sisters
 11. Bake big batches of bitter brown bread
 12. Snap crackle pop
 13. Elizabeth eleven elves in her elm tree
 14. A shapeless sash sags slowly
 15. Six Czech cricket critics
 16. Green glass globes glow greenly
 17. A proper copper coffee pot
 18. She sees cheese
 19. Red Buick, blue Buick
 20. Rubber baby buggy bumpers

நா பிறழ் நெகிழ் ஆங்கில சொற்றொடர்கள்:

 1. A pessimistic pest exists amidst us.
 2. Long Tongue Twisters
 3. Scream you scream we all scream for ice cream.
 4. She sells seashells by the seashore.
 5. Pad kid poured curd pulled cod.
 6. Tie twine to three tree twigs.
 7. Six sticky skeletons
 8. Fresh French fried fly fritters
 9. Double bubble gum, bubbles double
 10. Flash message.
Share This Article