Paytm சேவைக்கு தடை, அதிரடியாக அறிவித்த ரிசர்வ் வங்கி-பயனர்கள் அதிர்ச்சி!..

FRONT DESK
1 Min Read

Paytm இந்த சேவைக்கு தடை, அதிரடியாக அறிவித்த ரிசர்வ் வங்கி-பயனர்கள் அதிர்ச்சி!..

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி Paytm Payment Bank சேவைக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு புதிய வாடிக்கையாளர் இணைத்துக் கொள்ள பேடிஎம் பேமண்ட் பேங்க் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் தணிக்கையாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தொடர் விதிமீறலில் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி 29-ஆம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: பிப்ரவரியில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி!

இதனைத் தொடர்ந்து பேடிஎம் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பேடிஎம்-ல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும், பண பரிமாற்றம் செய்யவும் உதவும் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாடு நிறுத்தப்படுகிறது.

Fast Prepaid வசதிகளை வழங்கவும் பேடிஎம் செயலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பேடிஎம் யுபிஐ சேவைகளை பயன்படுத்தவும் தடையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Also Read: UPI பரிவர்த்தனைகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.625 கேஷ்பேக் ஆஃபர் – DCB வங்கி அதிரடி அறிவிப்பு!

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *