திரிபுராவில் பாஜக கூட்டணி அரசு வரும் 8 ஆம் தேதி பதவியேற்பு!..

திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: திரிபுராவில் பாஜக கூட்டணி அரசு வரும் 8 ஆம் தேதி பதவியேற்கிறது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு.

திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023

60 இடங்களை கொண்ட திரிபுர சட்டமன்ற பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 32 இடங்களிளிலும் அதன் கூட்டணி கட்சியான IPFI 1 இடத்திலும் வெற்றிபெற்றன.

இதன்முலம் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இந்நிலையில் ஆளுநரை சந்தித்து நேற்று(03.02.2034) தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த மாணிக் சாஹா புதிய அரசு வருகிற 8 ஆம் தேதி பதவியேற்கும் என் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அகர்தலாவில் உள்ள விவேகானந்தா மைதானத்தில் பதவியேற்பு விழா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment