
Horoscope Saturn transit 2023
Horoscope Saturn transit 2023: 2023 புத்தாண்டு எப்படி அமையப் போகிறது என்பதை அறியும் ஆர்வமும் ஆவலும் அனைவர் மனதிலும் உள்ளது. இன்னல்கள் நீங்குமா, புதிய பிரச்சனைகள் வருமா, எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா, உறவினர்களின் ஆதரவு கிடைக்குமா என்று பலரது மனதிலும் பல கேள்விகள் இருக்கும். திருமணம், தொழில், ஆரோக்கியம், வேலை என இந்த வருடம் எப்படி இருக்கும் என்பதை அறிய அனைவரும் காத்திருக்கின்றனர். புத்தாண்டில் பல கிரகங்களின் ராசி மாற்றம் மற்றும் நிலை மாற்றம் ஏற்படும். இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.
Horoscope Saturn transit 2023 | Sani Peyarchi 2023

வேத ஜோதிட கணக்கீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில், சனி, வியாழன் மற்றும் ராகு-கேது போன்ற முக்கிய கிரகங்கள் தங்கள் ராசி அடையாளங்களை மாற்றும். ஆண்டின் தொடக்கத்தில், மகர ராசியை விட்டு, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சனிதேவர் கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார்.
ஜனவரி 17, 2023 அன்று, சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். சனியின் இந்த சஞ்சாரத்தால், ஷஷ் ராஜ் யோகம் உருவாகும், இது சிலருக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். மேலும் இது மூன்று ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். அந்த ராசிகள் மூன்று எவை என்று தெரிந்து கொள்வோம்.
Read also : ராசி பலன்கள் 2023: 12 ராசிகளில் அதிர்ஷ்ட பலனை பெற உள்ள ராசிகள்
Horoscope Saturn Transit 2023
சனி என்றால் அனைவருக்கும் பயம். அதன் தீய கண்கள் வாழ்க்கையில் கொந்தளிப்பை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் அது மகிழ்ச்சியைத் தருகிறது. இதன்படி புத்தாண்டு முதல் சில ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சாதகமாக இருப்பார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் நுழையும் சனி, 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் சனி பகவான் மார்ச் 29, 2025 வரை கும்ப ராசியில் சஞ்சரிப்பார்.
கும்ப ராசியில் சனி நுழையும் போது ஷஷ மகாபுருஷ யோகம் உண்டாகும். சனியின் இந்த சஞ்சாரத்தால் ஷஷ ராஜ யோகம் உருவாகும். பஞ்ச மகாபுருஷ் ராஜயோகத்தில் ஷஷ யோகா மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தொழிலில் பதவி உயர்வு, பண வரவு இருக்கும். எனவே புத்தாண்டு முதல் சனிப்பெயர்ச்சி பலன்களைப் பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்று பார்ப்போம்.
ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இந்த ஆண்டு சனி சனிப்பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ மஹாபுருஷ ராஜ யோகத்தால் உங்களுக்கு எல்லாவித மகிழ்ச்சியையும் தரும். பெரிய பதவி கிடைக்கலாம். வெளிநாட்டில் இருந்து பணவரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணம் செல்லலாம். நீங்கள் புதிதாக தொழில் தொடங்க விரும்பினால் ஜனவரி 17 நல்ல நாளாக இருக்கும். இத்துடன் அதிர்ஷ்டமும் உங்களுடன் இருக்கும்.
துலாம்

துலாம் ராசி அன்பர்களே, இந்த ஆண்டு சனி சனிப்பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ மஹாபுருஷ ராஜ யோகத்தால் தொழிலில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். அரசுத் துறை மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரிகள் புதிய வேலைகளைத் தொடங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கணவன்-மனைவி உறவு இனிமையாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் வந்து சேரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக இட மாற்றம் ஏற்படலாம். பண ஆதாயம் உண்டாகும்.
தனுசு

தனுசு ராசி அன்பர்களே, இந்த ஆண்டு சனி சனிப்பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ மஹாபுருஷ ராஜ யோகத்தால் தடைகள், துன்பங்கள் அனைத்தும் நீங்கும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். அரசியலுடன் தொடர்புடையவர்கள் பெரும் வெற்றியைப் பெறுவார்கள். தைரியம் மற்றும் மன உறுதியுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் வரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். இல்லத்தில் திருமணச் சடங்குகள் நடைபெறலாம்.
Disclaimer: ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் பெயர் மற்றும் நட்சித்திரங்களின் அடிப்படையில் பலன்கள் மாறுபடும். ஆதலால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ராசி பலன்கள் அனைத்தும் பொது பலன்கள் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது.
Follow us
☛ இதையும் படிக்கலாமே