
பொங்கல் பரிசு 2023: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!..
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை அறிவித்துள்ளது.
இதை செயல்படுத்த தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் சென்னை தீவுத்திடலில் உள்ள ஒரு நியாயவிலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் உள்ள சுமார் 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் முறையில் பொங்கல் பரிசு தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தைப் பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2,429 கோடியில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில், வேட்டி மற்றும் சேலை, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு செங்கரும்பு, ரூ. 1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கிவருகிறது.
மேலும் அனைத்து மாவட்டங்களிலும் வருகிற ஜனவரி 12-ம் தேதி வரை நியாயவிலை கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 12-ம் தேதிக்குள் பெற இயலாதவர்கள், வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ம் தேதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow us
☛ இதையும் பார்க்கலாமே!..