தென்பாண்டி சிங்கம் மாவீரன் வாளுக்குவேலி அம்பலம் வரலாறு | Valukku Veli Ambalam in Tamil

Valukku Veli Ambalam in Tamil
Valukku Veli Ambalam in Tamil

History of Valukku Veli Ambalam in Tamil

Valukku Veli Ambalam in Tamil : “வாளுக்குவேலி அம்பலம்” கி.பி.18ஆம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகப் போராடிய பாகனேரி  நாட்டு கள்ளர் நாட்டுத் தலைவராவார்.நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, உதடுகளுக்கு மேல் உரை விட்டெழுந்த வாள் இரண்டை பதித்தது போல மீசை, கம்பீரத்தையும் கருணையின் சாயலையும் காட்டும் விழிகள், நீண்டுயர்ந்து வளைந்த மகுடத்தலைப்பாகை, நெடிய காதுகளில் தங்க வளையங்கள், விரிந்த மார்பகத்தில் விலை உயர்ந்த பதக்க மணிச்சரங்கள், இரும்புத்தூண் அணைய கால்களிலும் இரும்பு குண்டனைய புஜங்களிலும் காப்புகள், கையிலே ஈட்டி என வீரத்தின் முழு உருவமாக கத்தப்பட்டில் காட்சியளிக்கிறார் கள்ளர் குல மாவீரன் வாளுக்கு வெலி அம்பலம் அவர்களின் வரலாற்றை விரிவாக இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கலாம் வாங்க.

வாளுக்குவேலி அம்பலம் அவர்களின் வாழ்க்கை வரலாறு | Valukku Veli Ambalam in Tamil

Valukku Veli Ambalam in Tamil
Valukku Veli Ambalam in Tamil

வாளுக்கு வேலி என்ற சொல்லின் சிறப்பிற்கு ஏற்றார் போல வாழ்ந்து மறைந்த மாவீரர் அவர்கள். ஒரு உயிரை, உடமை, நாட்டு மக்களை, காத்து நிற்பது வாள் என்றால், அந்த வாளுக்கே வேலிபோன்று காப்பவன் என்பதே அச்சொல்லிற்கான பொருள். அப்பொருளுக்கேற்ற அப்பழுக்கற்ற வீரர் தென்பாண்டி சிங்கம் மாவீரன் வாளுக்குவேலி அம்பலம் அவர்கள்.

தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட, காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பாகனேரி உள்ளது. பாகனேரி நாடு என்பது 22 கிராமங்களை உடைய ஒரு பகுதி ஆகும். அவர்கள் வாளுக்குவேலி அம்பலம் பாகனேரி நாட்டின் தலைவராக இருந்தார். இவரது மனைவி கல்யாணி, கருத்தப்பன் அம்பலம் இவருடைய தம்பி ஆவர்.

மருது பாண்டியர்களின் நெருங்கிய நண்பராக இருந்த வாளுக்குவேலி அம்பலம், வெள்ளையர்களுக்கு எதிரான போரில் மருது பாண்டியர்களுக்கு உதவினார். வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்களுடன் நடந்த போரில் அவர் பங்கேற்றது சிவகங்கை சரித்ரா அம்மானை பக்கம் 151 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி கத்தப்பட்டு நகரில் சதித்திட்டங்களால் கொல்லப்பட்டார். அந்த இடத்தில், அவரது நினைவாக, அவரது சகோதரர் கருத்தப்பன் அம்பலத்தாரால் நடுகல் வைத்து வணங்கினார். இதில் வாளுக்குவேலி அம்பலம் கைகளில் ஈட்டி மற்றும் வளரி ஏந்திய சிலையுடன காட்சியளிக்கிறார்.

பாகனேரி நாடு | Valukku Veli Ambalam in Tamil

Valukku Veli Ambalam in Tamil
Valukku Veli Ambalam in Tamil

பாகனேரி நாடு என்பது தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட, சிவகங்கை வட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஒரு ஊராகும். “பாகனேரி நாடு” என்பது சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில், கல்லல், திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் ஒரு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஏறக்குறைய சுமார் 750 சதுர கிமீ பரப்பளவில் உள்ள பகுதியாகும். அதாவது கிழக்கில் அரண்மனை சிறுவயல், காளையார் கோவில், தெற்கில் மறவமங்கலம், ராஜசிம்ம மங்கலம், மேற்கில் சிவகங்கை, சோழபுரம், வடமேற்கில் திருக்கோஷ்ட்டியூர், வடக்கில் பட்டமங்கலம் வரை விரவி காணப்படுகிறது.

பாகனேரி நாடு என்பது தெற்கு வாசல் பகுதியில்

 • உதாரப்புலி
 • பரிசப்புலி
 • சொக்கனார்
 • பழயடிபுரம்
 • வாவிக்கும் மீண்டான்
 • மதியாப்புலி

பாகனேரி நாடு என்பது வடக்கு வாசல்  பகுதியில்

 • பாகனேரி நாடு என்பது வடக்கு வாசல்  பகுதியில்
 • குறுக்களாஞ்சி
 • குண்டச்சன்
 • பொண்ணூட்டச்சன்
 • கீழவாசல் வாளுக்கு வேலி 

என பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய நாடுகள் ஆகும்.

இதில் காளையார் கோவிலின் முக்கால் பகுதி பாகனேரி நாட்டிற்கு சொந்தமானது. இது தவிர கல்லல், திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் சிறு பகுதிகளும் இந்த நிலத்தில் அமைந்துள்ளன. அதன் எல்லைகளைக் குறிக்க, பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் எல்லையில் சீரான இடைவெளியில் வைக்கப்பட்டுள்ளன.

கீரனூர், முத்தூர், பையூர், விராணியூர், அல்லூர், சித்தத்தூர், பெரியகண்ணூர் ஆகிய ஏழு ஊர்களும் அவற்றின் துணைக் கிராமங்களும் பாகனேரியின் தென்பகுதியில் ஏழு கிராமங்களாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் கீரனூர் என்ற நகரம் தலைமையகமாகும். இந்தப் பாகனேரி நாட்டின் தலைவன் நமது தென்பாண்டிச் சிங்க வீரன் வழுக்குவேலி அம்பலம் ஆவார்.

Read also: மாமன்னர் ராஜ ராஜ சோழனின் வரலாறு

இராணி வேலுநாச்சியாருக்கு ஆதரவாக களம் கண்ட வாளுக்கு வேலி அம்பலம் | Valukku Veli Ambalam in Tamil

கி.பி.1780-ல் ஐதர் அலியின் படையின் உதவியினை பெற்ற வேலுநாச்சியார் தனது மருது சகோதரர்களுடன் சீமை மீட்கப் புறப்பட்ட போது, ​​அவர்களுக்கு ஆதரவளித்த கள்ளர் தலைவர்களில் வாளுக்கு வேலி அம்பலம் குறிப்பிடதகவராவார். இத்தகவல் சிவகங்கை சமஸ்தானத்தால் வெளியிட்டுள்ள சிவகங்கை அம்மானையில் இடம்பெற்றுள்ளது

தாட்சிணிய மில்லாச் சனமும் விருதுடனே நாச்சியப்பன் சேர்வையும் “வெகு கள்ளர் பெருஞ்சனமுங் கடுங்கோபமுள்ளவர்கள் மல்லாக்கோட்டை நாட்டவரும், சேதுபதியம்பலம் தீரனவன் சனமும், பேதகமில்லா பெரியபிள்ளை அம்பலமும், துடியன் வயித்தியலிங்க தொண்டைமான் தன்சனமும், மருவத்த மன்னன் மா வேலி வாளனுடன் வெரிமருது சேர்வை” (சிவ அம் பக் 150-151)

வேலுநாச்சியாருக்கு ஆதரவாக, மல்லக்கோட்டை நாச்சியப்பன் சேர்வையும், கள்ளர் பெருஞ்சாணம், மல்லக்கோட்டை வீரர் சேதுபதிஅம்பலம், பெரியபிள்ளையம்பலம், பட்டமங்கல வீரர் வைத்திலியங்க தொண்டைமான் மருவத்த மன்னன்  மாவேலி வாளன் வேலி ஆகியோர் வீரம் மிக்க வீரப்போர் புரிந்துள்ளனர்.

கி.பி.1780-ல் பாகனேரி நாட்டுத் தலைவன் வாளுக்கு வேலி அம்பலத்திற்கு சிவகங்கை சமஸ்தானத்தை மீட்கும் போரில் ஈடுபட்டது உறுதியானது. கி.பி 1801 இல் வெள்ளையருக்கு எதிரான போரின் முடிவில், மருதுபாண்டியரை தூக்கிலிடப்படுவதற்கு முன்பே கத்தப்பட்டு நகரில் வாளுக்கு வேலி துரோகமாகக் கொல்லப்பட்டார். இந்நிலையில் கத்தப்பட்டில் வாளுக்கு வேலி அம்பலம் உயிர் பிரிந்த இடத்தில் அவரது சிலை நிறுவப்பட்டு இன்றும் ஊர்மக்களால் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

வாளுக்குவேலி வம்சத்தாரின் கோவில் உரிமைகள் | Valukku Veli Ambalam in Tamil

பாகனேரி நாட்டில் நிலவும் புல்வநாயகி அம்மன் தல காலவரிசையில் வாளுக்கு வேலி அம்பலம் வம்சத்தைப் பற்றி பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன:-

பாகனேரியில் உள்ள புல்வநாயகி அம்மன் கோயில் திருவிழா ஆனி மாதம் நடைபெறுகிறது. திருவிழாவின் போது நடைபெறும் மண்டகப்படியில் வாளுக்கு வேலி அம்பலம் வம்சத்தினரால் ஆறாம் நாள் மண்டகப்படி நடத்தப்படுகிறது. மண்டகப்படியின் போது ” முத்துவிசய ரகுநாத கரியன் வாளுக்குவேலி பேரன்மார்கள் புல்வநாயகி அம்மனுக்கு மண்டகப்படி வைத்துக் கேளிக்கை பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே” என்ற வார்த்தைகள் இன்றும் ஓதப்படுகிறது.

இது தவிர வாளுக்குவேலிபுரம் பில்லப்பன் அம்பலம், உடியப்ப அம்பலம் ஆகியோருக்கும் எட்டாம் நாள் மண்டகப்படி ஏற்பாடு செய்ய உரிமை உண்டு. மண்டகப்படியின் போது “முத்துவிசய ரகுநாத காரியன் வழுக்வேலி பிலப்ப அம்பலம், மண்டகப்படியுடன் கேளிக்கை பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே” என்ற வாசகங்கள் ஓதப்படும்.

ஒன்பதாம் நாள் திருவிழாவில், நாட்டார்கள் விருதுகளுடன் வருவது வழக்கம். இவற்றில் வாளுக்குவேலி வம்சத்தினரும் குடை, தீவட்டி போன்ற விருதுகளுடன் கலந்து கொண்டனர். தேர் வடம் பிடித்து இழுத்து, தேங்காய், பொங்கல் போன்றவற்றைப் பெறும் உரிமையும் இந்த வம்சத்தினருக்கு உண்டு.

வாளுக்குவேலி அம்பலம் அவர்களின் நினைவு | Valukku Veli Ambalam in Tamil

வாளுக்குவேலி அம்பலம் அவர்களின் நினைவாக அவரின் வீரத்தினை போற்றும் வகையில் June 10-ஆம்தேதி, பாகனேரி நாட்டு மக்களால் பொங்கல் படையலிட்டு மற்றும் கள்ளர் மக்களால் வீர வணக்க நாளாக இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

வாளுக்குவேலி அம்பலம் அவர்களின் வீரத்தினை போற்றும் வகையில் அரசு விழா நடத்த வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை கள்ளர் மக்களால் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய வம்சாவளியினர் உடையப்பா அம்பலம் மற்றும் சுப்பிரமணியன் அம்பலம் ஆவார்கள்.

வாளுக்குவேலி அம்பலம் அவர்கள் பற்றிய நூல்கள்

“வாளுக்கு வேலி” அம்பலத்தின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு, S.S.தென்னரசு அவர்களால், 1975-ஆம் ஆண்டு “செம்மாதுளை” என்ற நூல் வெளியிடப்பட்டது.

அதே போல் வாளுக்குவேலி அம்பலம் அவர்கள் வீரத்தையும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியால் 1983 ஆம் எழுதப்பட்ட ஒரு வரலாற்று திரைப்படம் “தென்பாண்டிச் சிங்கம்” ஆகும். இக்கதை தென்பாண்டி சிங்கம் என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளியானது. இதில் நடிகர் நாசர் முதன்மை வேடத்தில் நடித்தார். இத்தொடருக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்தார்.

☛இதையும் படிக்கலாமே!

Follow us

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here