ஊரக ஊராட்சி என்றால் என்ன ? | TN rural development in tamil

TN rural development in tamil
TN rural development in tamil

ஊரக ஊராட்சி என்றால் என்ன ? ஊரக ஊராட்சியின் கடமைகள் பற்றிய விவரங்கள் என்னென்ன? | TN rural development in tamil

ஊரக ஊராட்சி | TN rural development in tamil

TN rural development in tamil: தமிழ்நாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகையில் 4-கோடிக்கும் அதிகமாக ஊரக பகுதிகளில் வசிக்கின்றனர். இப்பகுதியில் வாழுகின்ற மக்களுடைய வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வங்கியில் அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு, தரமான சாலை அமைத்தல் மற்றும் பராமரித்தல், துப்புரவுப் பணிகள் போன்ற அடிப்படைப் பணிகள் போன்றவற்றை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொண்டு வருகின்றது.

மேலும், பள்ளி கட்டிடங்கள் கட்டுதல், அவற்றில் குடிநீர் வசதி, கழிப்பறை போன்ற உள்கட்டமைப்பு வசதியினை அமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய முக்கிய பணிகளை இத்துறை செயல்படுத்தி வருகின்றது. ஊரக சுகாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைப்பது மற்றும் பராமரிப்பது, பொதுக்கழிப்பிடம், தனிநபர் கழிப்பிடங்களை அமைப்பது மற்றும் சுகாதாரத்தை பேணுவதற்காக விழிப்புணர்வினை ஏற்படுத்துவது ஆகிய பணிகளை இதில் மேற்கொள்ளப்படுகின்றது.

முக்கியமாக, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ஏழை மக்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்து அவர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தினை பெற்றிட வழிவகை செய்யப்படுகின்றது. இதுமட்டுமல்லாமல் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் கிராமப்புற மகளிர் மேம்பாடு, கிராம மக்களின் வறுமை ஒழிப்பு,  மற்றும் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவது ஆகியவற்றைவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படுத்தி வருகிறது.

Sudhartech

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்கள் | Ministers for Rural Development and Panchayat Raj

அமைச்சர்களின் பெயர் year
K. R. பெரியகருப்பன் 2021
S. P. Velumani 2014 – 2021
வீரபாண்டி S. ஆறுமுகம் 1989 – 1990
M.K.ஸ்டாலின் 2006 – 2011
P. மோகன் 2011 – 2012
K. P. முனுசாமி 2012 – 2016

3 அடுக்கு ஊரக ஊராட்சி அமைப்புகள் | TN rural development in tamil

நாட்டின் 73வது இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம், 1993-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிறகு, தமிழ்நாடு ஊராட்சிகளின் சட்டம், 1994-ஆம் ஆண்டு இயற்றப்பட்டன. சட்டதிருத்தத்தின்படி, ஊரகப் பகுதிகளில் மூன்றடுக்கு ஊராட்சி முறை கொண்டுவரப்பட்டது. அவைகளாவன,

 1. அடித்தள அமைப்பாக கிராம ஊராட்சி
 2. இடைநிலையில் வட்டார ஊராட்சி
 3. மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சி

ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றடுக்கு ஊராட்சிகளின் மூலம் மத்திய, மாநில அரசுகளுடைய அனைத்து ஊரக வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் முக்கிய நோக்கங்கள் | TN rural development in tamil

TN rural development in tamil
TN rural development in tamil

ஊரக பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் வழங்குதல், தெருவிளக்குகள் அமைப்பது மற்றும் பராமரிப்பது, ஊரக துப்புரவுப் பணிகள், சாலைகள், வடிகால் வசதிகள் அமைத்தல் மற்றும் பராமரிப்பது  போன்ற கிராம ஊராட்சியின் முக்கிய பணிகளாகும். அனைத்து தனி நபர் பயன்பெறும் வகையில் திட்டங்கள் பயனாளிகளுக்கு கிராம ஊராட்சிகள் மூலம் கண்டறியப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றது.

இதற்கு கிராம சபையானது ஒப்புதல் அளிக்கின்றது. இடைநிலை ஊராட்சியான வட்டார ஊராட்சி வலுவான நிர்வாக அமைப்பும், தொழில்நுட்ப பிரிவும் கொண்டுள்ளதால் ஊரக வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் கிராம ஊராட்சி மூலம் இணைந்து பங்காற்றுகின்றது.

திட்ட ஒருங்கிணைப்புகள், ஆய்வு மேற்கொள்ளுதல் ஆலோசனை வழங்குதல் மற்றும் கண்காணிக்கின்ற அமைப்பாக மாவட்ட ஊராட்சி விளங்குகிறது. 3 அடுக்கு ஊராட்சி அமைப்புகள் தங்களின் சட்டப்படியான விருப்ப கடமைகள் மற்றும் ஆய்வு செய்யும் கடமைகளோடு ஒப்படைக்கப்பட்ட பிற பணிகளை செய்து வருகின்றது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளின் நிர்வாக அமைப்பு –

TN rural development in tamil

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாநில அளவில் | Rural development department tamilnadu 

TN rural development in tamil
TN rural development in tamil

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் நிர்வாகத்தினை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் செயல்படுத்துகின்றார்.

மத்திய, மாநில அரசுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் செயலாக்கத்தை முறைப்படுத்தி கண்காணிபது போன்றவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்.

தொழில் நுட்பம் தொடர்பான பணிகளில் தலைமைப் பொறியாளர் அதிகாரம் கொண்ட ஒரு கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் செயல்படுகின்ற தொழில்நுட்ப பிரிவு, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு உதவி புரிந்து வருகின்றது. தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர், மகளிர் மேம்பாட்டிற்காக செயல்பட்டுவரும் பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பு ஆவார்.

கிராமப்புற ஏழை எளிய மக்களை ஆற்றல்படுத்துவது மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் திட்ட இயக்குநர் மற்றும் புது வாழ்வு திட்ட தலைமையில் செயல்பட்டுவருகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் 3 அடுக்கு ஊராட்சி அமைப்பின் ஆய்வாளராக செயல்படுகின்றார்.

மாவட்டத்தில் செயப்படும் திட்டப்பணியினை மேற்கொள்ளும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆவார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் திட்ட இயக்குநர், திட்டப் பணியினை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியருக்கு உதவிபுரிகின்றார். ஒவ்வொரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலும், நிர்வாக பொறியாளர் தலைமையில் ஒரு பொறியியல் பிரிவு இயங்கி வருகின்றது.

உதவி இயக்குநர் நிலையிலான ஒரு செயலாளர், மாவட்ட ஊராட்சியில் பணிபுரிகின்றார். அத்தோடு, இவர் பதவிவழி மாவட்ட திட்டக் குழுவின் செயலாளராக இருக்கிறார். மேலும், நேர்முக உதவியாளர் (Development), உதவி இயக்குநர் (Municipality) மற்றும் உதவி இயக்குநர் (Auditing) ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு ஊராட்சி நிர்வாகத்தில் உதவி புரிகின்றார்கள்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வட்டார அளவில் | District Panchayat in tamilnadu

TN rural development in tamil
TN rural development in tamil

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் நிர்வாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (District Panchayat), வட்டார வளர்ச்சி அலுவலர் (Grama Panchayat) என இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளார்கள். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (District Panchayat) ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆவார். வட்டார வளர்ச்சி அலுவலர் (Grama Panchayat), கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம ஊராட்சியில் செயல்பட்டுவரும் வளர்ச்சி திட்டங்களை கண்காணிப்பது போன்ற பணிகளை மேற்கொள்கின்றார்.

ஒவ்வொரு வட்டார ஊராட்சியிலும் ஒன்றியப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர், பணிமேற்பார்வையாளர் மற்றும் சாலை ஆய்வாளர் ஆகியோர் தொழில்நுட்பப் பணியினை மேற்கொள்கின்றனர். இப்பொறியாளர்களின் செயல்பாடுளை உட்கோட்ட அளவிலுள்ள ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர்களால் கண்காணிக்கப்படுகின்றது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கிராம ஊராட்சி அளவில் | Village panchayat in tamilnadu

TN rural development in tamil
TN rural development in tamil

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் நிர்வாகத்தில் கிராம ஊராட்சி தலைவரே கிராம ஊராட்சியின் செயல் அலுவளராக செயல்படுகிறார். இதில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் அல்லது ஊராட்சிகளின் ஆய்வாளரால் (அதாவது மாவட்ட ஆட்சித் தலைவர்) நியமிக்கப்படும்.

கிராம ஊராட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கிராம ஊராட்சி கணக்குகளில் இருந்து மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கான காசோலைகளில் ஒப்ப ந்தம் செய்யும் அதிகாரங்களை வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சித் தலைவருக்கு கிராம ஊராட்சி செயலாளர் நிர்வாகத்தில் உதவி புரிகின்றார்.

ஊராட்சி நிர்வாகங்களின் கடமைகள் | TN rural development in tamil

கிராம ஊராட்சியின் கடமைகள்

3 அடுக்கு ஊராட்சிகளிலேயே, அடிப்படை வசதிகளை உருவாக்கி, அவற்றை பராமரிக்கும் பொறுப்பிலிருந்து செயல்படும் அமைப்பாக, கிராம ஊராட்சிகள்தான் விளங்குகின்றது. இந்த அமைப்பானது , மக்களுக்கும், அரசுக்கும் இடையில் பாலமாக செயல்படுகின்றது.

கிராம ஊராட்சியின் கட்டாயக் கடமைகள் 

தமிழ்நாடு ஊரக ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 110-ன் படி  கீழ்க்கண்டவற்றை கிராம ஊராட்சிகளின் கட்டாயக் கடமைகளாக வகைப்படுத்தியுள்ளன.

 • கிராம ஊராட்சிகளில் சாலை அமைப்பது , அச்சாலைகளில் பாலங்கள் மற்றும் கல்வெட்டுகள் போன்றவற்றினை ஏற்படுத்துதல், தெருக்களை மேம்பாடு செய்வது மற்றும் அவற்றை அவ்வப்போது பழுது பார்த்து பராமரிப்பு செய்வது.
 • குடியிருப்புப பகுதிகளில், பொதுச் சாலை, தெருக்கள், பொதுமக்கள் கூடுமிடங்கள் போன்ற பகுதிகளில் தெரு விளக்குகளை அமைத்து  பராமரிப்பது.
 • கிராமப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் போதுமான அளவு கிடைக்க வகை செய்வது. இதற்கான உரிய திட்டங்களை நேரடியாகவும், ஊராட்சி ஒன்றியங்கள் அல்லது குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாகவும் செயல்படுத்துவது, விசைப்பம்பு, கைப்பம்பு மற்றும் பொதுக் குழாய் போன்றவற்றை நிறுவுவது, ஏற்ற இடங்களில் வீட்டு இணைப்பு வழங்குவது மற்றும் அத்தகைய குடிநீர் திட்டங்களை பராமரிப்பது.
 • கிராமப்புறங்களில் பொது சுகாதாரத்தினை மேம்படுத்த பொது கழிப்பிடங்கள் கட்டுவது, பள்ளிகளில் சுகாதார வசதியினை நிறுவுவது, வீடுகளில் கழிப்பிட வசதியினை ஏற்படுத்தி கொள்ள மக்களுக்கு உதவி செய்வது, இதன் மூலம் கிராமப்புற சுற்று சூழல் மாசுபடுவதினைத் தடுத்து தனிநபர் சுகாதார வசதியினை மேம்படுத்துவது.
 • கிராமப்புற பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதினைத் தவிர்க்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது, மேலும் நீர்நிலைகளில் நீர் மாசுபடுவதைத் தடுப்பது, கழிவு நீர்க் கால்வாய்களை அமைத்து குப்பை மற்றும் கழிவுகளை தெருக்களிலிருந்து அகற்றுவது, மரங்களை நட்டு சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது.
 • கிராமப்புற பொது மக்களின் சுகாதாரத்திற்கு, பாதுகாப்பிற்கு இடையூறாக காணப்படுகின்ற புதர்கள், முட்செடிகள், பாழுங்கிணறுகள், சுகாதாரக் கேடான குளங்கள் மற்றும் குட்டைகளை அகற்றுவது.
 • கிராமப்புறங்களில் இடுகாடு மற்றும் சுடுகாடு போன்றவற்றை அமைத்துப் பராமரிப்பது.
 • கிராமப்புற நத்தங்களை விரிவுபடுத்துவது மற்றும் கட்டடங்களை ஒழுங்குபடுத்துவது.
 • கிராமப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் அரசால் கொடுக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் பிற திட்டங்களை செயல்படுத்துவது.
 • கிராமப்புற பகுதியில் அரசு அவ்வப்போது கொடுக்கப்படும் திட்டம் சார்ந்த பிற கடமைகளை ஆற்றுவது.

கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகள்

கிராம ஊராட்சிகள் 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 111-ன் படி கிழ்வரும் கடமைகளை தேவைக்கேற்ப, நிதி ஆதாரத்தினை கணக்கில் கொண்டு கிராம ஊராட்சிகளை மேற்கொள்ளலாம்.

 • சாலைகளில் இருபுறங்களில் மரக் கன்றுகளை அமைத்து பராமரிப்பது.
 • கிராமப்புறங்களில் குடியிருப்பு மற்றும் கட்டடங்கள் உள்ள பகுதிகளுக்கு சாலைகளில் தெரு விளக்குகள் அமைத்துப் பராமரிப்பது.
 • பொது சந்தைகள் அமைத்துப் பராமரிப்பது.
 • உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் சந்தைகளில்  சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்வது.
 • வண்டி நிறுத்துமிடங்கள், பேருந்து நிறுத்துமிடங்கள் மாற்று  கால்நடைத் தொழுவங்களைப் பராமரிப்பது.
 • இறைச்சிக் கூடங்கள் அமைப்பது.
 • பயணிகள் தங்குமிடங்களை அமைத்துப் பராமரிப்பது.
 • நூலகங்கள் மற்றும் படிப்பகங்களை ஏற்படுத்திப் பராமரிப்பது.
 • வானொலி, தொலைக்காட்சி அறைகள், விளையாட்டுத் திடல்கள், மற்றும் பூங்காக்களை அமைப்பது.
 • கிராமப்புறங்களில் உடற்பயிற்சி நிலையங்களை அமைத்துப் பராமரிப்பது.
 • முறைசாரா கல்வி, சமூக கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி நிலையங்களை அமைத்து நடத்துவது.

கிராம ஊராட்சியின் கிராம ஊராட்சிக் குழுக்கள் | Village panchayat in tamilnadu

ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் கீழ்க்கண்ட குழுக்கள் அமைத்து செயல்படுகிறது.

 • நியமனக்குழு
 • வளர்ச்சிக்குழு
 • வேளாண்மைக் குழு
 • பணிகள் குழு
 • கல்விக் குழு

நியமனக் குழு 

 • கிராம ஊராட்சிகளில் ஊராட்சி நிதியில் ஊதியம் பெற அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை வேளைக்கு தேர்வு செய்வது இக்குழுவின் முக்கிய பணியாகும்.
 • இக்குழுவில் கிராம ஊராட்சி  தலைவரும், தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும் நியனக்குழுவில் இடம் பெறுவர்.

வளர்ச்சிக் குழு 

 • வளர்ச்சிக் குழுவின் தலைவராக கிராம ஊராட்சியில் உள்ள பெண் உறுப்பினர்களில் ஒருவர் இருப்பார். மேலும் இரண்டு உறுப்பினர்களும் இதில் இடம் பெறுவர்.
 • சுகாதாரம், குடிநீர், மக்கள் நலம், சமுதாய சொத்துக்கள் ஆகியவற்றினை பராமரிப்பது, தரம் உயர்த்துவது, தொற்று நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு முகாம் அமைப்பது, தடுப்பூசி முகாம் அமைப்பது போன்றவை இக்குழுவின் முக்கிய பணியாகும்.

வேளாண்மைக் குழு 

 • இக்குழுவின் தலைவர், கிராம ஊராட்சியின் உறுப்பினர்களுள் ஒருவர் ஆவார்.
 • நீர்பாசன ஆதாரங்களில் நவீன தொழில் நுட்பங்த்தினை பயன்படுத்த விவசாய குழுக்களை ஏற்படுத்துவது, தோட்டக்கலை, பட்டு வளர்ப்பு, பால் பண்ணை, வேளாண்மை, தரிசு நில மேம்பாடு, வறட்சிப் பணி மேம்பாடு, சமூக காடுகள், நில மேலாண்மை மற்றும் மண் அரிப்பு தடுப்பு ஆகிய நடவடிக்கைகளில் கிராம ஊராட்சிக்கு உதவுவது போன்ற பணிகளை இக்குழு மேற்கொள்கிறது.

பணிகள் குழு 

 • மத்திய, மாநில அரசுத் திட்டத்தினை தரத்துடன் உரிய காலங்களில் நிறைவேற்றவது, கிராம ஊராட்சிப் பகுதியிலுள்ள உள்ளூர் வள ஆதாரங்த்தினைப் பயன்படுத்தி வளர்ச்சித் திட்டங்களை தயாரிக்கவும், கிராம ஊராட்சிக்கு உதவியாக இக்குழு இருக்கும்.

கல்விக் குழு 

 • கிராம ஊராட்சிப் பகுதியிலுள்ள அனைத்து பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது, பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்துவதற்கு மக்களின் பங்கேற்பினை பெறுவது, முதியோர் கல்வி, நூலகப் பராமரிப்பு, எழுத்தறிவு போன்றவற்றை ஏற்படுத்தும் முகாம்களை அமைப்பது போன்றவை இக்குழுவின் முக்கிய பணியாகும்.

Read also:

SudhartechVisit also: