Section 144-ஊரடங்கு தடை உத்தரவு என்றால் என்ன? | Section 144 in tamil

Section 144 in tamil
Section 144 in tamil

Section 144 in tamil: இந்திய தண்டனைச் சட்டம், 1973-பிரிவு 144-ன் படி, சட்டவிரோதமாக கூடுதலை தடை செய்வதற்காக, நீதிமன்ற குற்றவியல் நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் பிரிவு-144 சட்டம் அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கூடினால், இச்சட்டத்தின் பிரிவு-141 முதல் 149-ன் படி, சட்டவிரோதமாக கூடியவர்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் தொகை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

பிரித்தானிய இந்திய பேரரசு இந்தியாவில், இந்திய விடுதலை இயக்க வீர்ரகளை கட்டுப்படுத்தும் வகையில் 1861-ஆம் ஆண்டு இந்திய தண்டனைமானது சட்டத்தில் இப்பிரிவு இணைக்கப்பட்டது.

Section 144  Law in tamil | Section 144 in tamil

144 தடை உத்தரவு என்றால் என்ன? | What is section 144 in tamil?

Section 144  சட்டம்  (Unlawful Assembly) என்பது சட்டவிரோதமாக கூடுதல், பொது மக்களின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தில், பொது இடங்களில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் கூடுதல்,  கலகம், கிளர்ச்சி அல்லது கலவரம் செய்வதை தூண்டும் நோக்கில் கூடுவதை குறிக்கிறது.

  • பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், உயிர் சேதம் ஏற்படாத வகையில் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது.
  • 144 தடை உத்தரவினை, மத்திய மற்றும் மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர், மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர்கள் ஆகியோரால் பிறப்பிக்கலாம்.
  • 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் இடங்களில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது குற்றமாகும்.
  • தடை உத்தரவு மற்றும் கட்டுப்பாடினை மீறினால், அதிகபட்சம் 3 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு (curfew) சொலின் பயன்பாடு | Section 144 means  in tamil

Section 144 in tamil
Section 144 in tamil
  • ஊரடங்கு உத்தரவு (curfew) என்பது பிரெஞ்சு மொழியில் இருந்து வந்ததாகும். “‘couvre-feu'” என்பது “நெருப்பை மூடுவது” என்று பொருள். இச்சொல்லானது பின் curfeu என்ற சொல்லாக மற்றும் இடைக்கால ஆங்கிலத்திலும், பின் ‘curfew” என்ற சொல்லாக நவீன ஆங்கிலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • ஒவ்வொரு முறையம் அசாதாரண சூழல் ஏற்படும் போதெல்லாம் இச்சட்டம் பயன்படுகின்றது. பிரிட்டீஷ் இந்தியாவில், இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட வீரர்களை ஒடுக்கும் வகையில் இச்சட்டங்கள் இயற்றப்பட்டது என்பது குறுப்பிடத்தக்கது.
  • ஊரடங்கு உத்தரவு என்பது, காவல்துறையினர் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பொதுமக்கள் வீட்டின் உள்ளே இருத்தல் வேண்டும் என்பது விதிமுறையாகும். இந்த விதிமுறைகள் வன்முறை காலகட்டங்களில்  நிலைமைகளை சமாளிக்கவும், சீரமைக்கவும், நோய் பரவல் காலங்களில் மிக உதவியாக இருக்கும்.
  • ஊரடங்கு உத்தரவு காலகட்டத்தில் முன்பாக போலீஸ் அனுமதியின்றி மக்கள் நடமாடவோ, வீட்டை விட்டு வெளிவரவோ தடை விதிக்கப்படுகின்றது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க இது அனுமதிக்கப்படுகின்றது. மற்றும் சந்தைகள், பள்ளிகள் மூடப்பட வேண்டும்.
What is section 144 in india? | Section 144 in tamil

முதல் ஊரடங்கு | Section 144 in tamil

1861 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது பரோடாவில் கலவரம் வெடித்தது. கலவரத்தை ஒடுக்க ஐபிஎஸ் அதிகாரி ராஜ் ரத்னா இ.எஃப். டிபோ என்ற போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார். மக்கள் கூடுவதை தடுக்க 144 தடை விதித்தார். இதன் மூலம் அவர் அந்த நேரத்தில் பரோடா மாநிலத்தில் இருந்த மொத்த கலவரத்தைக் குறைத்தார்.

குற்றங்களை குறைத்ததற்காக ராஜா கெய்க்வாட்டிடம் இருந்து தங்கப் பதக்கம் பெற்றார். பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கம் சுதந்திரப் போராட்டத்தின் போது அடிக்கடி பயன்படுத்தியது. சிறிய மாற்றங்களுடன் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இதுவே முதன் முதலில் பிறப்பித்த உறடங்காகும்.

(Section 144)144-வது சட்ட பிரிவு என்ன சொல்கிறது? | 144 section rules in tamil

1861-ஆம் ஆண்டில் திரு.ராஜ்-ரத்னா E.F. டீபோ என்ற காவல் அதிகாரி 144-வது பிரிவினை இயற்றினார் ஆவார், அதன் மூலம் பரோடா மாநிலத்தில் அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட மொத்தக்  குற்றங்களையும்  குறைத்தார்.

குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு-144. தொல்லை அல்லது எதிர்பார்க்கப்படுகின்ற அபாயம், நோய் பரவல் காலங்களில் ஏற்படும் அவசர நிலைகளில் உத்தரவு பிறப்பிப்பதற்குட்பட்ட அதிகாரங்கள்

  • மாவட்ட நடுவர்(District magistrate மற்றும் District Collector), உட்கோட்ட நடுவர் (Additional District magistrate மற்றும் District Revenue Officer அல்லது மாநில அரசால் இதற்கென சிறப்பு  அதிகாரமளிக்கப்பட்ட நிர்வாகத்துறை நடுவரின் கருத்தின்படி, இந்த பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதற்கு போதுமான காரணம் இருந்தது. அதில் உடனடியாக தடையோ, விரைவான பரிகாரமோ விரும்பத்தக்க நிலைகளில் அத்தகைய நடுவர்கள் வழக்கிற்கு முக்கியமானவையாக உள்ள சங்கதிகளை  குறிப்பிட்டு Section 134-வது பிரிவின் படி சார்வு செய்யப்படும் எழுத்து வடிவத்தில் ஒரு கட்டளை மூலமாக ஒருவரது அனுபோகத்தில் அல்லது அவரது ஆளுகையில் உள்ள குறிப்பிட்ட சொத்தினை பொறுத்து குறிப்பிட்ட செயலினை தவிர்க்குமாறு, அல்லது குறிப்பிட்ட உத்தரவை பெற்றுக் கொள்ளுமாறு, அவருக்கு உத்தரவிடுவதாகும். சட்டபூர்வமாக வேலை செய்து வருகின்ற எவருக்கும் ஏற்படும் இடையூறு, தொந்தரவு அல்லது மனித உயிர், ஆரோக்கியம் அல்லது பாதுகாப்புக்கு ஏற்படும் அபாயத்தையோ, பொது அமைதிக்கு ஏற்படும் பங்கம் விளைவிப்பது, அல்லது கலகம் அல்லது சச்சரவையோ தடுக்கக் கூடும் என்று எண்ணுவாரானால் இத்தகைய நடுவர்கள் உத்தரவிடலாம்.
  • இந்த பிரிவின் படி கட்டளை ஒன்று நெருக்கடி நிலையிலும், அல்லது எவருக்கெதிராக கட்டளை குறிப்பிட்டனுப்பப்படுகிறதோ அவர்களுக்கு முன்னறிவிப்பை, உரிய காலத்தில் சார்வு செய்வதற்கு சூழ்நிலைகள் இடங்கொடுக்காத சந்தர்ப்பங்களில் அவர் இல்லாமலேயே இச்சட்டத்தினை பிறப்பிக்கப்படலாம்.
  • இந்த பிரிவின் படி கட்டளை ஒன்று, குறிப்பிட்ட ஒருவருக்கு, குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட அப்பகுதியில் அடிக்கடி வந்து போகின்ற அல்லது பார்க்க வருகின்ற பொதுமக்களுக்கு பொதுவாக குறிப்பிட்டு அனுப்பலாம்.
  • இந்த பிரிவின் படி பிறப்பிக்கப்பட்ட கட்டளை எதுவும் அது பிறப்பிக்கப்பட்டதில் இருந்து இரண்டு மாதங்களுக்கு மேல் அமலில் இருத்தல் கூடாது. மனித உயிர், ஆரோக்கியத்திற்கு ஏற்படும் அபாயத்தினைத் தடுப்பதற்காகாகவோ, கலகம் அல்லது சச்சரவு எதையும் தடுப்பதற்காக, அவ்வாறு செய்வது அவசியம் என மாநில அரசாங்கம் அந்த அறிவிப்பு மூலமாக, இந்த பிரிவின் படி நடுவரால் பிறபிக்கப்பட்ட ஒரு கட்டளையானது மேற்சொன்ன அறிவிப்பில் அரசு குறிப்பிடலாகும். இது கால அளவுக்கு அந்த கட்டளையானது  அமலில் இருக்க வேண்டுமென உத்தரவிடலாம்.
  • நடுவர்கள் தம்மாலோ, தமக்கு கீழ் அமைந்துள்ள நடுவராலோ அல்லது தமக்கு முன்பிருந்தவராலோ பிறப்பிக்கப்பட்ட கட்டளை எதனையும் முன்வந்தோ அல்லது அக்கட்டளையால் பாதிக்கப்பட்டவரின் விண்ணப்பத்தின் பெயரில் அதை ரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம்.
  • மாநில அரசு, 4-வது உட்பிரிவின் வரையரையின் படி தான் பிறப்பித்த கட்டளை எதையும் தானே முன் வந்தோ அல்லது இந்த கட்டளையால் பாதிக்கப்பட்டவருடைய விண்ணப்பத்தின் பேயரிலோ ரத்து செய்யலாம்.
  • 5-ஆவது உட்பிரிவு மற்றும் 6-வது உட்பிரிவின் படி விண்ணப்பமொன்று கிடைக்கப்பெற்றவுடன், நிலவரத்திற்கேற்ப, நடுவரோ அல்லது மாநில அரசாங்கமோ, தம்முன் நேர்முகமாக அந்த கட்டளையை எதிர்த்து காரணம் சொல்வதற்காண வாய்ப்பினை விண்ணப்பதாரருக்கு அளித்தல் வேண்டும். நிலவரத்திற்கு ஏற்ப நடுவரோ அல்லது மாநில அரசோ விண்ணப்பத்தை, முழுவதுமோ ஒரு பகுதியையோ நிராகரிப்பாரானால் அவர் அவ்வாறு செய்வதற்கான காரணங்களை எழுத்து மூலம் பதிவு செய்ய வேண்டும்.

Section 144-வது பிரிவின் நோக்கம் | Section 144 in tamil

Section 144 பிரிவை நியாயமான  பயன்பாட்டிற்கான விதிமுறைகள்:

  • அச்சுறுத்தல்
  • மனித வாழ்க்கைக்கு பங்கம் விளைவித்தல்
  • பொது அமைதிக்கு இடையூறு உண்டுபன்னுதல்
  • ஒரு தரப்பினருக்கு அனுகூலத்தை வழங்குவதற்காக இதை செய்ய முடியாது. இது அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல என அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது என்பது குற்றவியல் நடைமுறை கோட்பாட்டில் 144-வது பிரிவின் கீழ் செல்லுபடியாகும் என்று அது அரசியலமைப்புக்குட்பட்டதே ஆகும்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் சந்தர்ப்பங்கள் என்ன? | Section 144 in tamil

  • இது இனம், மதம்,  சாதிக் கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, முன்பாதுகாப்பு போன்ற சந்தர்ப்பங்களில் இது பிறப்பிக்கப்படுகிறது.
  • Section 144 ஆணை என்பது உரிய முறையில் வெளியிட வேண்டும்.  இந்த பிரிவின் படி வெளியிடப்படும் தடை ஆணை, பிரிவு 134-ல் உள்ளபடி குற்றவியல் நடைமுறைச் சட்டம் வெளியிட வேண்டும் என கூறுகின்றது.

Section 144 என்ன கூறுகின்றது ? | Section 144 in tamil

இந்த ஆணை சாத்தியமாக இருக்கின்ற பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு சம்மன் வழங்குவதன் மூலம் கொடுக்க வேண்டும். சாத்தியம் இல்லாத போது, இந்த ஆணை ஒரு வெளியீட்டின் மூலமாக, மாநில அரசு வெளியிடும் விதியின் படி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியும் முறையில் பொது இடத்தில் ஒட்டப்படுவதன் மூலம் இது தெரிவிக்க வேண்டும்.

Section 144 தடை உத்தரவிலிருந்து பள்ளி, கல்லூரி வாகனங்கள் தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் போன்றவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது.

மீறினால் என்ன தண்டனை? | 144 section rules in tamil

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188. பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்:-

Section 144 in tamil
Section 144 in tamil
  • இந்தத் தடையை மீறுவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188ன் கீழ் தண்டனைக்குரியது. தடையை மீறுவோர் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.200 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
  • தடை உத்தரவை மீறி, மனித உயிருக்கு கேடு விளைவிப்பவர், உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால், ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் என இரண்டும் விதிக்கப்படும்.

ஊரடங்கின் போது காவல்துறையின் கடமைகள் என்ன? | Section 144 in tamil 

Section 144 in tamil
Section 144 in tamil
  • Police Standing Order PSO No:703 Sec 6 (B)-ன் படி துப்பாக்கி சூடு, தடியடி போன்ற நிகழ்வுக்கு பின்னர் காவல் துறை உடனடியாக காயம்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தல், காயம்பட்டவர்களை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • Police Standing Order PSO No 705 உட்பிரிவு (F) ன்  படி கலவரம் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் அவசர கால ஊர்தி, ஆம்புலன்ஸ், நிறுத்தி வைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைப்பதனால் கலவரக்காரர்கள் மனதில் அமைதி ஏற்பட இது வழிவகுக்கும்.

Section 144 144 தடை உத்தரவின் நடைமுறை | 144 section rules in tamil

  • 144 தடை உத்தரவுகளின் காலம் இரண்டு மாதங்கள் மற்றும் அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம். நிலைமை சாதாரணமாக இருக்கும்போது எந்த நேரத்திலும் அதை அகற்றலாம். ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த வேண்டும் என்றால், அதற்கு அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.
  • டெல்லியில் ராஷ்டிரபதி பவன், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், பிரதமர் இல்லம், விமான நிலையம் போன்ற இடங்களில் எல்லா நேரங்களிலும் தடை உத்தரவு அமலில் உள்ளது மேலும் அது மேலும் நீட்டிக்கப்படும்.
  • பிரதம மந்திரி, மாநில முதல்வர், மாவட்ட ஆட்சியர் அல்லது மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ளவர்கள் தங்கள் நிர்வாகப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குறிப்பிட்ட நகரத்திற்கு எதிராக இந்த ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கலாம்.

Read also:

Visit also: