
Pongal Wishes in Tamil:பொங்கல் தமிழர்களின் தொன்மையான பண்டிகை. பொங்கல் திருவிழா என்பது சங்க காலத்திலிருந்தே தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருநாள் ஆகும். இந்த நன்னாளில் மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்கள். தைத்திருநாளில் சூரியன் உதிக்கின்ற வேளையில் பொங்கலிட்டு தமது நன்றியினை வெளிக்காட்டுக்கின்றனர். இதில் விவசாயிகள் மட்டுமின்றி ஒவ்வொரு மனிதனும் சூரியனுக்காக நன்றி கூறும் நாளாக இந்த நாள் தொன்றுதொட்டு கொண்டாடப்படுகிறது.
Pongal quotes in tamil | பொங்கல் வாழ்த்து செய்திகள்
தாவரங்கள், உழவு கருவிகள் மற்றும் பசுக்களுக்கு உயிர் கொடுத்த சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் இந்நாளில் மக்கள் கடவுளை மட்டுமின்றி இயற்கை மற்றும் விவசாயத்திற்கு உதவும் உயிரினங்களையும் வணங்குகின்றனர். இந்த பொங்கல் திருநாலானது ஜாதி, மத, இன பாகுபாடின்றி கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஆண்டுதோறும் ஜனவரி இரண்டாம் வாரம் தொடங்கும் பொங்கல் விழா, முன்று நாட்களும் கோலாகலமாக நடைபெறும்.
Pongal wishes in tamil | தைத்திருநாள் பொங்கல் திருவிழா
“ஆடிப் பட்டம் தேடி விதை” என்பது விவசாயிகளின் பழங்கால பொன்மொழி ஆகும். தை மாதமானது பயிர்களை ஆடி மாதத்தில் விதைத்து அந்த பயிர்களின் விளைச்சலினை அறுவடை செய்யும் பருவமாகும். அந்த அறுவடையின் மூலம் கிடைக்கின்ற நெல்லிலிருந்து எடுக்கப்படுகின்ற முதல் அரிசியில் சர்க்கரை, பால், நெய் சேர்த்து புதுப் பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து நன்றி கூறும் விழாவே தைப்பொங்கல் திருவிழாவாகும். தை மாதத்தில் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவானது முதல் நாளில் சூரியப்பொங்கல், இரண்டாம் நாளில் மாட்டுப்பொங்கல், மூன்றாம் நாளில் காணும் பொங்கல் என்று தமிழர்களால் ஆண்டு தோறும் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
Happy pongal in tamil | Pongal Wishes in Tamil |
Pongal quotes in tamil | சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
Pongal kavithai in tamil / Pongal Wishes in Tamil
தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையானது தற்போது உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தைத்திருநாளான பொங்கல் விழாவின்போது உங்கள் அன்புக்குரியவரியவர்களுக்கு தங்களுடைய பொங்கல் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பறிமாறி கொள்வது வழக்கம். அப்படி இந்த இனிய நாளில் உங்களுடைய குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தொலைபேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் வாழ்த்து புகைப்படங்களை அனுப்பி மகிழ்வதற்காக நாங்கள இத்தளத்தில் பொங்கல் வாழ்த்து புகைப்படங்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை கவிதை தொகுப்பாக கொடுத்துள்ளோம். இவையெல்லம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக
Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்து கவிதைகள்

தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும், தை மாதமும் பிறந்தது, தமிழ்ப்புத்தாண்டும் பிறந்தது.இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும்!..உங்கள் அனைவருக்கும் SudharTech-ன் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!

தித்திக்கும் பொங்கலிட்டு, நாற்திக்கும் சோறுகொடுக்கின்ற விவசாயிகள் மனம் குளிர மும்மாரி மழை பொழியட்டும்!..விவசாயி களின் வாழ்வு சிறக்கட்டும்!..நாடு வளர்ச்சி அடையட்டும்!.. அனைவருக்கும் இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!

நல்வாழ்வு பொங்க இல்லங்களில் சுவையாறு தங்க!.. இந்த நாள் போல் எந்நாளும் மகிழ்வுடன் வாழ்வேண்டி அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

விவசாயிகளின் வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி!..வெயில் மழை எனப்பாராமல் பாடுபட்டு!..உழைத்தெடுத்த நெல்மணிகளை புதுப்பானையில் பொங்கலிட்டு!..அனைவருக்கும் எங்கள் இதயம் கணிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

இவ்வுலகில் வாழும் உயிரினங்களுக்கு உண்ண உணவளிக்கின்ற இயற்கை தாய்க்கும்!.. குடிமக்கள் அனைவரும் உயிர்வாழ்வதற்கு சோறு படைக்கும் விவசாய பெருங்குடிகளுக்கும் நன்றியுடன் கூறிடுவோம்!..தித்திப்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை..!

உலகிற்கு மழைதரும் காட்டிற்கு!..வளம்தருக்கின்ற மண்ணிர்க்கு!..செடிகொடிகள் வளர உயிர் தரும் சூரியனுக்கு!..ஆகாரம் தரும் நீரிருக்கு!..தன் உழைப்பால் உலகிற்கு சோறுபோட்ட விவசாயிகள் உள்ளனர்!..அவர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!

மக்கள் அனைவரும் நோயின்றி வாழ்வதோடு நல்லசுகம் பெற்று!.. மாசற்ற குழந்தைகளின் மனம்போல அன்பினை பெற்று!.., அளவோடு பெற்ற செல்வத்தினை பிறருக்கு பகிர்ந்து!.., சுற்றமும் போற்றும் மனிதர்களாய் வாழ இந்த தைத்திருநாளில் வாழ்த்துகின்றோம் அனைவரையும்..!

இல்லங்கள் தோறும் பால் பொங்கல் பொங்கிட!.., உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கிட, தரணியெங்கும் ஆனந்தம் பரவிட!.., குடிமக்கள் அனைவரின் வாழ்க்கை சிறக்கட்டும்!.., அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..!

தொன்றுதொட்டு அரசன் ஆண்ட காலம் முதலிலிருந்து நன்றி சொல்லி பழகிய திருநாள்!.., சூரியனுக்கும்!..உழவுக்குதவும் கருவிகள்!..ஏர் உழும் மாடுகள்!.. என அனைவருக்கும் நன்றியினை கூறும் நன்னாள்!.. பொங்கல் படைக்கின்ற பொன்னாள்!.. அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!..

இல்லங்களில் அன்பு பொங்கிட!.., ஆசைகள் பொங்கிட!.., இன்பம் பொங்கிட!,,, இனிமை பொங்கிட!.. என்றும் மகிழ்ச்சி பொங்கிட அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!..

உலகெங்கும் வாழும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

பயிர் அறுவடைத் திருநாளாம் பொங்கல் நாளில், தமிழர்களின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவ, நலமும், வளமும் பெருக!.. இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

தமிழர்களின் திருநாள் இது தமிழர்களின் வாழ்வை வளமாக்குகின்ற திருநாள்!… உழைக்கும் விவசாயிகளுடைய களைப்பினை போக்கி உற்சாக படுத்தும் திருநாள்!…இந்நாளில் அனைவருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!…

தைத்திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும்!..,நல்ல அன்பையும்!.., மகிழ்ச்சியையும் தரட்டும். கடின உழைத்து வரும் நமது விவசாய குடிமக்களின் வாழ்வில் வளத்தை பெற இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

தித்திக்கின்ற கரும்பினைப் போல உங்களுடைய வாழ்வு மகிழ்ச்சியில் இனிமையாகட்டும்!.. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

தமிழர்களின் வீரம் போற்றுகின்ற ஜல்லிக்கட்டு!.. தமிழா வீரத்தால் அதை நீ வென்று காட்டு!.. அனைவர்க்கும் இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!..

பூமியில் விவசாயத்திற்கு சாமியாய் நிற்கின்ற சூரிய பகவானுக்கு எங்கள் முதல் வணக்கம்!..தைத்திருநாளில் சூரிய பொங்கலிட்டு கதிரவன் மனம் குளிர படைத்திடுவோம் சர்க்கரை பொங்கலை!.. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..!

தைத்திருநாளில் தரணியெங்கும் தழைக்கட்டும் மக்களின் வளம்!.. வயல்களெல்லாம் நெல்மணிகள் நிறையட்டும்!.. மக்களின் மனங்களெல்லாம் மகிழ்ச்சி நிறையட்டும்!..தைப்பொங்கல் திருநாளில் இல்லம்தோறும் இன்பம் பொங்கட்டும்!..அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!..

வாழ்வில் பழையன கழிய!..புதியன புகுந்திட!..தீயவை அழிந்திட!..நல்லவை குடியேற!.. போகிப் பண்டிகையுடன்!..அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!..

கடவுள் மனிதனுக்கு அளித்த பெருங்கொடை மாடு!..பாலுக்கு பசுவும்!..உழவுக்கு எருதும் என்று கொடுத்த இறைவா!..உனக்கு முதல் வணக்கங்கள் கூறி!..எங்களுக்கு உதவும் பசுவுக்கும்,எருதுக்கும் முதலில் பொங்கல் படைத்து புண்ணியம் தேடுகின்றோம்!..அருள்வாய் இறைவா!..எங்களுக்கு!.. இந்நன்னாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!..

தைத்திருநாளில் மஞ்சள் கிழங்கு, செங்கரும்பு, மாவிலை, தோரணம் உயர்த்தி கட்டிய கோபுரம், விறகடுப்பில் வைத்திருக்கும் மட்பானை, பச்சரிசி, வெல்லம், சேர்த்து மனம் மணக்க பொங்கலை வைத்து படையலிட்டு மகிழ்ச்சியோடு சுற்றமும் பகிர்ந்து உண்போம்!..அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!..

தைத்திருநாளில் பச்ச குழந்தை பால் குடிக்க!.., பெத்த குழந்தைக்குகூட பால் கொடுக்காமல் மத்த குழந்தைகளை வளர பால் கொடுக்கும் கோமாதாவே!.. உன்னை வணங்குகின்றோம்!..இந்த நாளில்..! அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!..

அறுவடை திருநாள் மண்ணிலே!..மகிழ்ச்சி பொங்குமே உழவனது கண்ணிலே!..பொங்கல் திருநன்னாளில், தமிழர்களுடைய வாழ்வில் அன்பு பரவட்டும்!.. அமைதி நிலவட்டும்!..வாழ்வும், நலமும், வளமும் பெருகட்டும்!..இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!

தைத்திருநாள் என்பது திருப்பம் தரும் பொன்னாள்!..பொங்கல் திருநாள் மக்களுடைய வாழ்வில் மகிழ்ச்சியினை நிரப்பி ஒளிமயமான ஒரு எதிர்காலமென்பது உருவாகிட!..இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..!

காலங்கள் பல மாறினாலும்,மன்னர் ஆட்சி மக்களாட்சிகள் பல வந்தாலும், அதில் பல காட்சிகள்தந்தாலும், சாட்சி சொல்லி நிற்கும் ஓர் நாளென்றால், அது என்றும் மாறாத தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள்!.. அனைவருக்கு தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!..

இல்லங்களில் உள்ளம் மகிழ!.., இல்லம் நிறைய!.., அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!..

தமிழினை, நம் உயிராய், உணர்வாய், உயர்வாய், உணரும் தமிழ் உடன்பிறப்புகளுக்கு!..தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

தைத்திருநாளில் தித்திப்பது பொங்கல் மட்டுமல்ல!..எங்களுடைய செந்தமிழும்தான்!.. பொங்கட்டும் பொங்கல் புதுப்பானையில்!.. பொங்கலைப் போல பிறக்கட்டும் மகிழ்ச்சியான புதுவாழ்வு!..நாவிற்கு திகட்டாத கரும்பு போல இனிக்கட்டும் அன்பு மக்களின் வாழ்க்கையில்!..அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

தைத்திருநாளில் நோயற்ற வாழ்வோடு நல்ல சுகம் பெற்று மாசற்ற குழந்தைகளின் மனம்போல அன்பைப்பெற்று, அளவோடு பெற்ற செல்வத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து, சுற்றமும் போற்றும் மாமனிதராய் வாழ இந்த தைத்திருநாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள்!..

தை பொங்கல் திருநாள் மக்களுடைய வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒரு ஒளிமயமான எதிர்காலத்தினை உருவாக்கிட அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்!..

இந்நன்னாளில் வெறுப்பினை தீயிட்டு பொசுக்கி, பகைமையை களைந்து, அன்பிணை பேணிக்காத்து , பகைவனையும் நண்பர்களாக்கி, கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!..அனைவருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

தாய்த்தமிழை உயிராக நினைக்கின்ற தமிழனுக்கும், அனைத்து தமிழர்களையும் உறவாக நினைக்கின்ற தமிழர்களுக்கும்!..இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

சிங்கத்தை போல் சீறி வரும் காளையினை, சிங்கமென பாய்ந்து அடக்குகின்ற காளையர்களுக்கு!..மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

உலகில் உழவனும் உழவும் இல்லையேல் என்றால் உடலுக்கு உணர்வு இல்லை!.. இதை உணராதவர் மனிதனே இல்லை!..அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

இவ்வுலகில் உயர் சாதி என மார்தட்டி சொல்லும் தகுதிபடைத்த ஒரே சாதி உழுது விதைத்து பசியாற்றுகின்ற விவசாய சாதி தான்!..அவர்களுக்கு இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

உலகில் நோய்க்கு மருந்தளித்து உயிரை காக்கும் மருத்துவர்கள் கடவுள் என்றால், அம்மருத்துவருக்கே உணவளித்து உயிர் காக்கின்ற உழவன் மிக மிக உயர்ந்த கடவுள் ஆவர்!..எனதருமை விவசாய பெருங்குடி மக்களுக்கு உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!..
Read also:
- Life quotes – சிந்திக்க வைக்கும் வாழ்க்கை மேற்கோள்கள்
- இந்தியாவின் கல்வி அமைச்சர்களின் பட்டியல் (1947-2022)
- Section 144-ஊரடங்கு தடை உத்தரவு என்றால் என்ன?
- வரலாறு: அக்ஷய பாத்திரம்(அட்சயப் பாத்திரம்)
- மன ஆற்றல் அதிகரிக்க உதவும்–பகவத் கீதை பொன்மொழிகள்
- இயேசு கிருஸ்துவின் பைபிள் வசனங்கள்
Visit also: