பழனி முருகன் கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் | Palani Murugan Temple History in Tamil

Palani murugan temple history in tamil
Palani murugan temple history in tamil

Palani murugan temple history in tamil: அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது ஆகும். இக்கோயில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிக பிரசித்தி பெற்றது. இது திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரத்தில், முன்பு திருவினன்குடி இது பழைய சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரத்தில், கோயம்புத்தூரிலிருந்து தென்கிழக்கே 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவிலும், இந்தியாவின் தமிழ்நாடு, பழனி மலையின் அடிவாரத்தில் மதுரைக்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது. பழனி முருகப்பெருமான், ஆண்டிக்கோலத்தில் தண்டாயுதபாணியாக பக்தகோடிகளுக்கு அருள்பாலிக்கின்றார். இத்தலத்திலுள்ள மூலவர் சிலையானது நவபாஷணத்தால் ஆனது. இச்சிலையை அகத்தியரின் தலைமை சீடரான போகர் முனிவர் உருவாக்கப்பட்டது என்கிறது தலபுராணம்.

Palani dhandayuthapani temple | Palani murugan temple history in tamil

பழனி பெயர் வரக்காரணம் | Palani temple in tamil 

Palani murugan temple history in tamil
Palani murugan temple history in tamil

பழனி என்பது ஒரு மலையின் பெயர் ஆகும். பழனி மலையையும், மலையடிவாரத்திலுள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் கொண்ட நகரமே பழனி என அழைக்கப்படுகின்றது. இக்கோவில் “பழனி” என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மகன் முருகப்பெருமானை “ஞானப் பழம் நீ” என அழைத்ததன் காரணமாக , “பழம் நீ” என வழங்கப் பெற்றுப் பின் பழனி என மருவியது.

  •     திரு – லட்சுமி
  •     ஆ – காமதேனு
  •     இனன் – சூரியன்
  •     கு – பூமாதேவி
  •     டி – அக்கினிதேவன்

இவர்கள் ஐவரும் முருகனை பூசித்ததன் காரணமாக இந்த தலத்திற்கு “திருவாவினன் குடி” என பெயர் ஆயிற்று. இந்நகரம் மேற்குத்தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளன. இது சங்ககாலத்தில் பழனி பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பொதினி என்ற பெயர் நாளடைவில் பழனி என்று ஆகிவிட்டதாக அகநானூறு கூறுகின்றது.

பழனி முருகன் கோவில் வரலாறு | Palani murugan temple history 

Palani murugan temple history in tamil
Palani murugan temple history in tamil
  • முருகனைப் பிரிந்த துயரம் தாங்காத சிவபெருமானும் உமாதேவியும் முருகனுக்குப் பின் திருவாவினன் இல்லம் வந்து முருகனை “பழம் நீ” என்று அழைத்தனர். அதுவே இறுதியில் மருவி “பழனி” ஆனது என பழனி ஸ்தல புராணம் கூறுகிறது. பழனி மலையில் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் சிலைகள் பழனிக்காக உலகம் சுற்றும் போட்டியைக் குறிக்கின்றன, மேலும் முருகன் கோயிலுக்கு தெற்கே மலையில் கைலாசநாதர் கோயில் காணப்படும், அது இறைவியும் முருகனை பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றது.
  • பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர், தனது சீடன் இடும்பாசுரனை கயிலைக்குச் சென்று முருகனுக்கு அருகில் உள்ள கந்த மலையில் காணப்படும் சிவசக்தி வடிவில் சிவகிரி மற்றும் சக்திகிரி என்ற இரண்டு சிகரங்களைக் கொண்டு வந்து வழிபடுமாறு அறிவுறுத்தினார். இடும்பாசுரன் பெரும் பக்தராக இருந்ததால், அகஸ்தியரின் உத்தரவின் பேரில், அவர் தனது மனைவி இடும்பியுடன் கயிலைக்கு வந்து, ஒரு பெரிய பிரம்ம தண்டத்தில் இருபுறமும் சிவகிரியையும் சக்திகிரியையும் தோளில் சுமந்து வந்தார்.
  • இவ்விரு கிரிகளையும் திருவாவினன் குடியில் நிலைபெற செய்யது, இடும்பனுக்கு அருள்புரிய பெருவிருப்பம் கொண்டு முருகப்பெருமான் குதிரை மேல் செல்லும் அரசனாக வடிவெடுத்து வந்தார். வழி தெரியாமல் இடும்பன் தவித்து கொண்டு நின்றார். முருகப்பெருமான் இடும்பனை திருவாவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று இளைப்பாறி போகும்படி கூறினார். அதற்கு இடும்பனும் காவடியினை இறக்கி வைத்து இளைப்பாறினான். மீண்டும் காவடியை தூக்க முடியவில்லை. அதன் காரணத்தினை ஆராய்ந்தார் இடும்பன்.
  • அப்போது சிவகிரி மலையில் ஒரு சிறுவன் கையில் சிறு தடியுடன் பசுவைப் போல் நிற்பதை இடும்பன் கண்டான். அச்சிருவனை மலையை விட்டு இறங்கி வருமாறு இடும்பன் கட்டளையிட்டான். ஆனால் அச்சிறுவன் இது தனக்கு சொந்தமானது என கூறி அச்சிறுவனை தாக்க முயன்றார், இதனால் ஆத்திரமடைந்த இடும்பன் அச்சிறுவனை தாக்க முயன்று பின் கீழே விழுந்தார். அப்போது இடும்பனின் மனைவி இடும்பியும், அகஸ்திய முனிவரும் பிரார்த்தனை செய்ய ஓடி வர, அவருக்கு சிறுவனாக வந்த முருகன், இடும்பை உயிர்த்தெழுந்தார்.
  • இடும்பனின் அன்பையும் பக்தியையும் ரசித்த முருகப்பெருமான் இடும்பைக்கு தனது காவல் தெய்வமாகப் பட்டம் அளித்து, தன் சன்னதிக்கு வரும் அனைவருக்கும் இடும்பனை போன்று சந்தனம், பால், பூ, பண்ணீர் ஆகியவற்றை வழங்கி அருள்பாலிப்பதாக வாக்களித்தார். அன்று முதல் முருகன் கோவில்களில் காவடி எடுக்கும் வழக்கம் இருந்து வருகின்றது.
  • மலைமீதுள்ள முருகப்பெருமானை வழிபட செல்பவர்கள் முதலில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள இடும்பன் கோயிலை வழிபட வேண்டும். இடும்பன் சிறந்த அருளாளர். இச்சிவகிரியின் உச்சியில் தண்டாயுதபாணி என்றழைக்கப்படும் முருகன் கோவில் உள்ளது.

பழனி முருகன் கோயிலின் முக்கிய திருவிழாக்கள் | Palani temple festivals in tamil

Palani murugan temple history in tamil
Palani murugan temple history in tamil
  • பழனி முருகன் கோயிலானது, திருவிழாக்களுக்கு மிகவும் பெயர்பெற்ற ஊராகும்.
  • இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் போன்ற விழாக்கள் வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுகின்றது.
  • முக்கியமாக தைப்பூச திருவிழாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து இக் கோயிலுக்கு வந்து செல்வதை ஒரு வரமாக கொண்டுள்ளனர்.
  • இந்த கோயிலிலுள்ள தங்கத் தேர் வழிப்பாடு மிகச்சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.

பழனி கோயிலின் சிறப்பம்சங்கள் | Highlights of Palani temple in tamil

Palani murugan temple history in tamil
Palani murugan temple history in tamil
  • பழனி மலை முருகன் கோயில்(palani murugan temple), பெரியநாயகி கோயில் மற்றும் திருவினன்குடி கோயில் என்ற மூன்று கோயில்கள் தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
  • பழனி தண்டாயுதபாணி சிலைக்கு நான்கு விதமான அபிஷேக பொருட்களை மட்டுமே உபயோகிக்கப்படுகின்றது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி போன்றவை பண்ணீர் மார்கழி மாதத்தில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
  • இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியினுடைய சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகின்றது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்பது முழு அபிஷேகமானது சந்தனமும், பன்னீரும் மட்டும் தான்.
  • இதில் சிரசு விபூதியானது சித்தரின் உத்தரவினால் பக்தர்களுக்கு வழங்கபடுகின்ற ஒரு பிரசாதம். அது இங்கு கிடைப்பது மிக புண்ணியம் என்பது நம்பிக்கை.
  • பழனி மலை முருகனுக்கு நாள் ஒன்றிற்கு ஆறு முறை அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யபடுகின்றது. இந்த அபிஷேகம் மற்றும் அலங்காரம் ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்க்குள் முடிக்கப்படுகிறது.
  • இந்த அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்த பின், அடுத்த அபிஷேகம் செய்யும் வரை முருகனுக்கு மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதன்பது கிடையாது.
  • இரவு நேரங்களில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவத்தில் சந்தன காப்பு சார்த்தபடுகின்றது.
  • முருகனின் விக்ரகத்தின் புருவங்களுக்கு இடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படுகின்றது. முற்காலத்தில் சந்தன காப்பினை முருகனுடைய முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பிற்கலங்களில் இம்முறை மாற்றப்பட்டது.
  • தண்டாயுதபாணி விக்ரகம் என்பது மிகுந்த சூடாக இருக்கும். அதனால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்தில் இருந்து நீர் வெளிப்படுகிறது. இநநீரை அபிஷேக தீர்த்ததோடு கலந்து, காலை அபிஷேகம் நடக்கின்ற போது, அங்கு இருக்கின்ற பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
  • தண்டாயுதபாணியின் நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல மிக தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணமாகும்.
  • தண்டாயுதபாணியின் சிலையை சுற்றி எப்போதும் ஒரு விதமான சுகந்த மணம் பரவி நிற்கும்.
  • தண்டாயுதபாணி முருகனின் சிலையை செய்வதற்கு போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் சுமார் ஒன்பது வருடம் ஆகும்.
  • முருகர், அம்பாள், அகத்தியர் இவர்ளின் உத்தரவிற்க்கு பிறகு தான் போகர் இப்படி ஒரு சக்தி மிகுந்த சிலையினை செய்ய முயற்ச்சி எடுத்தார். இதற்காக சுமார் 4000 மேற்பட்ட மூலிகையினை பல்வேறு இடங்களிலும் சென்று கொண்டு வந்தார் போகர்.
  • இதில் 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தினை போகர் சொற்படி தயார் செய்தனர். இது ஒரு பொது நல எண்ணத்தோடு செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தினை குறைத்து சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு முக்கிய தகவழும் உண்டு.
  • அகத்தியரின் உத்தரவினால், ஒரு அசுரன், இரு மலையினை காவடி போல சுமந்து பொதிகை மலை நோக்கி கொண்டு செல்ல, முருகன் அவனைத் தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கின்ற இடத்தில் வைக்க செய்தார் என்று சங்ககால புராணத்  தகவல் கூறுகிறது.
  • போகர் இகபரத்திலிருக்கும் போது தன் மனைவிக்காக கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனுடைய சிலையை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தனர். இதன் காரணமாக, மலை நாட்டிலுள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வமாக விளங்குகிறது.
  • கற்சிலைகளால் ஆன பல கோவில்கள் சிதிலமடைந்து வருகின்றதில், இந்த கோவில் மேலும் மேலும் வளர்ந்து வருவதற்கும் சித்தர்களின் மகிமை தான் காரணம் என பலரும் நினைக்கின்றனர்.
  • தண்டாயுதபாணி சிலைக்கு இடதுபுறம் சிறிய மரகத லிங்கம் உள்ளது. அவரைச் சந்திக்க, வலதுபுறம் சென்று தீபம் காட்ட வேண்டும். ஏனெனில் விளக்கு இல்லாமல் அந்த சிவலிங்கத்தை பார்க்க முடியாது.
  • பழனியில் இரண்டு மரகத லிங்கங்கள் உள்ளன. ஒன்று முருகனுடைய சன்னதியிலும், இன்னொன்று போகருடைய சமாதியின் மேல் உள்ளது. இந்த இரண்டு லிங்கங்களும் போகர் பூஜை செய்ததாக கூறப்படுகின்றது.

பழனி முருகன் கோயில் | Pazhani temple in tamil

Palani murugan temple history in tamil
Palani murugan temple history in tamil

மூலவர் : திருஆவினன்குடி – குழந்தை வேலாயுதர்

மலைக்கோயில் : தண்டாயுதபாணி, நவபாஷாண மூர்த்தி

தல விருட்சம் : நெல்லி மரம்

தீர்த்தம் : சண்முக நதி

ஆகமம் : சிவாகமம்

புராணப் பெயர் : திருஆவினன் குடி

ஊர் : பழனி

மாவட்டம்: திண்டுக்கல்

மாநிலம் : தமிழ்நாடு

முகவரி : அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்,

                  பழனி 

                  திண்டுக்கல் மாவட்டம்-624601. 

பழனி முருகன் கோவிலின் எழில்மிகு தோற்றம் | Palani temple in tamil 

Palani murugan temple history in tamil
Palani murugan temple history in tamilPalani murugan temple history in tamil

பழனி முருகன் கோவில் மலையை சுற்றிலும் சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு மரம், செடி, கொடிகள் நிறைந்த சோலைகளும் அழகிய கிரிவல பிரகாரமும், இப்பிரகாரத்தின் நான்கு திருப்பங்களில் பெரிய மயிலின் உருவ சிலைகள் உடைய மண்டபங்களும் இருக்கின்றது. இங்கு கிரிவலம் மிக சிறப்புடையதாக அமைந்துள்ளது. மலை பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் கோவிலும் ,  கோவிலுக்கு எதிரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது. கோவில் அருகிலுள்ள மயில் மண்டபத்தில் இருந்து சுமார் 695 படிக்கட்டுகள் மலை கோவிலுக்கு அழைத்து செல்கின்றது. வழி நெடுககிலும் சற்று இளைப்பாறுவதற்கு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல தெய்வ ஆலயங்களும் இருக்கின்றது.

முருகனின் மூன்றாவது படைவீடான இம்மலைக்கோயிலில்  முருகப்பெருமான் தனது ஆண்டி கோலத்தின் மூலம் குன்றின் உச்சியில் கோவில் கொண்டிருப்பதன் மூலமும் ஒரு உண்மையை நமக்கு போதிக்கின்றார். இங்கு ஆனந்தமயமான முருகனை சென்றடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமென்றால் மனதை இறைவனிடம் செலுத்தினால் மட்டும்தான் முடியும். மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் சிலை வடிவில் தோன்றினாலும், உண்மையில் அவருடைய திருமேனி போகர் எனும் சித்தரால், “நவபாஷாணம்” எனப்படும் 9 வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது என பழங்கால சங்ககால இலக்கியங்கள் புராணங்கள் கூறுகின்றது.

பழனிமலையில் முருகப்பெருமான் அபிஷேக பிரியராக சிவனின் அம்சமாக விளங்குகின்றார். மற்ற திருத்தலத்தை போல இல்லாமல் இங்கு இரவு நேர பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவது இல்லை. இங்கு அதிகாலை முதல் இரவு பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றின் மூலம் அபிஷேகங்கள் நடந்தவாறு இருக்கின்றது. அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களை எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லமை கூடாது என கூறப்படுகின்றது. தண்டாயுதபாணி சுவாமியை மொட்டையாண்டியாக படங்களில் சித்தரித்திருந்தாலும், இப்பெருமான் சடாமுடியுடன் விளங்குகிறார் என்பதனை அபிஷேக காலத்தில் நன்கு அறிய படலாம்.

போகர் சித்தர் மற்றும் அவரது சீடரான புலிப்பாணி முனிவர்களால் பின்பற்றப்பட்ட ஞான தண்டாயுதபாணி கோவில், சேர மன்னர்களால் முதன்முதலில் புதுப்பிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக கேரள மக்கள் அதிக அளவில் வழிபட வருவதாகவும் கூறப்படுகிறது. சபரிமலை ஐயப்ப சுவாமி மற்றும் குருவாயூரப்பனை தரிசிக்க வருபவர்கள் பழனி சென்று ஸ்தல தரிசனம் முடிக்க பழனி இறைவனை வழிபட வேண்டும் என்பது மரபு.

பழனி முருகனின் தல சிறப்பு | Specialty of Palani temple

Palani murugan temple history in tamil
Palani murugan temple history in tamil

பழனி மலையில் திருவண்ணாமலை அருணாச்சல மலையினை மக்கள் சித்ராபவுர்ணமி அன்று எப்படி கிரிவலம் வருகிறனரோ அதுபோல அக்னி நட்சத்திர நாளில் பக்தகொடிகள் பழனி மலையினை கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் மலையின் முழுவதும்  கிரிவலம் வந்த பின், சுமார் 450 மீட்டர் உயரமாக உள்ள மலையை சுமார் 690 படிகள் எறி வரவேண்டும். இங்கு நடந்து மலையில் ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதி இருக்கின்றது. இங்கு இருக்கும் முருகப்பெருமானுக்கு நல்லெண்ணெய், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி என்ற நான்கு பொருட்களை கொண்டு அபிஷேக ஆராதனை செய்யப்படுகின்றது. இதில் பன்னீர் அபிஷேகம் மார்கழி மாதம் மட்டும் செய்யப்படுகின்றது. சந்தனம் மற்றும் பன்னீர் தவிர்த்து மீதிமுள்ள அபிஷேக பொருட்களை எல்லாம் முருகன் விக்கிரகத்தின் மீதுள்ள தலையில் வைத்து எடுத்துவிடுகின்றனர். முருகன்பெருமான் சிலையின் மீது வைத்து எடுக்கப்படுகின்ற “சிரசு விபூதி” சித்தர்களுடைய உத்தரவின்படி பக்தர்களுக்கு வழங்கப்படுகிற அரிதான பிரசாதமாகும். பொதுவாக கோவில்களில் அன்னாபிஷேகம் நடக்கும், ஆனால் பழனி முருகன் கோவிலில் விசேஷ நட்சத்திர நாட்களில் அன்னாபிஷேகம் நடக்கும்.

முருகனுக்கு தினமும் ஆறு முறை பிரதிஷ்டை செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. ஒருமுறை பிஷேகம், அலங்காரம் முடிந்த பிறகு, பூ, மாலை போன்ற பிஷேகம் எதுவும் இல்லை. திருப்பதி கோவிலின் பிரசாதமாக லட்டு எப்படி பிரசித்தி பெற்றதோ, அதேபோல் பழனி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பழனி பஞ்சாமிர்தமும் உலகப்புகழ் பெற்றது. இந்த கோவிலின் பஞ்சாமிர்த பிரசாதத்தை உண்பவர்கள், உடல் நோய்களில் இருந்து விடுதலை பெறுவதாக அனுபவசாலிகள் தெரிவிக்கின்றனர். மேற்கே கேரள மாநிலத்தை நோக்கிய இக்கோயிலில் தண்டாயுதபாணி அமர்ந்திருப்பதால், பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமான மலையாள பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பழனி மலை முருகன் கோவில், தமிழக கோவில்களில், கோடிக்கணக்கான பக்தர்களின் காணிக்கை பெறும் பெரிய கோவில். பழனிப் பெருமானை வழிபடும் சில பக்தர்கள் தங்கள் தொழிலிலும், வியாபாரங்களில் அவரைப் பங்குதாரராகக் கருதி, அதிக லாபம் சம்பாதித்து, அந்த லாபத்தில் ஒரு பகுதியை இந்தக் கோயிலின் உண்டியலில் காணிக்கையாகப் பழனி முருகனுக்குச் செலுத்துகிறார்கள். திருப்பதியில் தன் விருப்பம் நிறைவேற மொட்டை அடிப்பது போல் பழனியும் முருகனுக்கு காணிக்கை செலுத்துகிறார். இங்குள்ள போகர், சித்தரின் சமாதியில் வழிபடுவதால், இந்த பழனி மலையில் மாய வடிவில் வாழும் போகர் நம் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறார். ஆன்மிக அறிவு, திருமணம், குழந்தைகள், வேலை வாய்ப்பு, தொழில், வியாபாரம் போன்றவற்றில் வெற்றி பெற வேண்டி அதிகமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

பழனி முருகன் கோவில் திறக்கும் நேரம் | Pazhani temple in tamil 

பழனி மலை முருகன் கோயில்(palani murugan temple), பெரியநாயகி கோயில் மற்றும் திருவினன்குடி கோயில் என்ற மூன்று கோயில்கள் தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பழனி கோவில் முருகனின் அலங்காரம் மற்றும் பூஜை செய்யும் நேரங்கள்

நேரம் பூஜை  அலங்காரம்
06:40 AM to 07:15 AM விளா பூஜை சன்னியாசி அலங்காரம்
08:00 AM to 08:30 AM சிறுகால சந்தி பூஜை வேடன் அலங்காரம்
09:00 AM to 09:30 AM காலசந்தி பூஜை பாலசுப்ரமணியர் அலங்காரம்
12:00 PM to 12:45 PM உச்சிக்கால பூஜை வைத்தீகல் அலங்காரம்
05:30 PM to 06:15 PM சாயரட்சை பூஜை ராஜா அலங்காரம்
08:30 PM to 09:00 PM இராக்கால பூஜை புஷ்பா அலங்காரம்

Read also:

Visit also: