
Tamil uyir mei eluthukkal :தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து என்பது மொழியில் உள்ள ஒலியினைக் குறிக்கவும், வரிவடிவத்தினை குறிக்கவும் இன்றளவில் பயன்பட்டு வருகிறது. அந்த வகையில் எழுத்துக்களானது தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் முக்கிய பங்காற்றிவருகிறது. அந்த வகையில் நாம் இங்கு உயிர் மெய் எழுத்துக்கள் என்றால் என்ன? உயிர் மெய் எழுத்துக்களின் வகைகள் யாவை? அதன் விளக்கம் பற்றி விரிவான தகவல்களை இங்கு பார்க்கலாம்.
தமிழ் உயிர்மெய் எழுத்து | Tamil uyir mei eluthukkal |
உயிர் எழுத்துக்கள் – What is tamil uyir mei eluthukkal?
தமிழ் மொழியில் மொத்தம் 12 உயிர் எழுத்துக்கள் உள்ளன. இந்த எழுத்துக்களை vowels என்று ஆங்கிலத்தில் கூறுவர்.
குறில்:- அ, இ, உ, எ, ஒ ஆகிய 5-ம் குறில்களாகும்.இவற்றைக் குற்றெழுத்து என்றும் கூறுவர்.
நெடில்:- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய 7-ம் நெடில்களாகும். இவற்றை நெட்டெழுத்து என்றும் கூறுவர். இதில் ஐ மற்றும் ஒள இவ்விரண்டு எழுத்துக்கள் தன் இயல்பான அளவில் இருந்து குறுகி ஒலிக்கிறது.
இந்த 12 எழுத்துக்கள் தமிழின் உயிரெழுத்து ஆகும்.
- அ, ஆ ,இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள
ஆயுத எழுத்து :
தமிழிலுள்ள ஆயுத எழுத்துகள் மொத்தம் ஒரே ஒரு எழுத்து தான் இருக்கிறது. இந்த எழுத்தை அக்கு என்று உச்சரிக்க வேண்டும். ஃ ஆய்த எழுத்தினைத் தனிநிலை என்றும் கூறுவர்.
மெய் எழுத்துக்கள் :
தமிழில் மொத்தம் உள்ள மெய் எழுத்துக்கள் 18. மெய் என்றால் உடல் என்று தமிழில் பொருள்.
- க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்
இந்த மெய் எழுத்துக்கள் மொத்தம் மூன்று வகைப்படும்
வல்லினம்,மெல்லினம்,இடையினம்.
வல்லினம்
மெய் எழுத்துக்களில் வன்மையாக ஒலிக்கின்ற எழுத்துகளை வல்லின எழுத்துகள் என்று கூறுகின்றனர்.
- க், ச், ட், த், ப், ற் இந்த ஆறு மெய் எழுத்துக்களும் வல்லின எழுத்துகள் ஆகும்
மெல்லினம்
மெய்யெழுத்துக்களில் மென்மையாக ஒலிக்கின்ற எழுத்தினை மெல்லின எழுத்துக்கள் என்று கூறுகின்றனர்.
- ங், ஞ், ண், ந், ம், ன் போன்ற ஆறு மெய்யெழுத்துக்களும் மென்மையாக ஒலிப்பதனால் மெல்லின எழுத்துகளாகும்.
இடையினம்
மெய்யெழுத்துக்களில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிக்கின்ற எழுத்துகளை இடையின எழுத்துக்கள் என்று கூறுகின்றனர்.
- ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறு மெய்யெழுத்துக்கள் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிப்பதால் இடையின எழுத்துக்கள் எனப்படும்.
உயிர் மெய்யெழுத்துக்கள்-tamil uyir mei eluthukkal
Tamil uyir mei eluthukkal 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 (12×18=216), ஆய்த எழுத்து 1, ஆக மொத்தம் 247 என்று நாம் படித்திருக்கிறோம்.
- மெய்யெழுத்து என்பது உயிர்மெய் எழுத்துகளை இணைத்து உருவாக்கக்கூடிய எழுத்து. அதாவது 18 மெய்யெழுத்துகளும் 12 உயிர்மெழுத்துக்களும் கொண்ட எழுத்து ஒரு உயிர் மெய் எழுத்துக்கள் எனப்படும்.
- இந்த எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் முன்னும் உயிரெழுத்துக்கள் பின்னும் வரும். உயிர் மெய் எழுத்துக்கள் மெய்யெழுத்துகள் மற்றும் உயிரெழுத்துக்களின் கலவையான ஒலி வடிவத்தைக் கொண்டுள்ளன.
- உயிர் + மெய் = உயிர்மெய்
Tamil uyir mei eluthukkal-எடுத்துக்காட்டு:
‘க்’ எனும் மெய்யும் ‘அ’ எனும் உயிரெழுத்தும் சேர்வதனால் ‘க’ எனும் உயிர்மெய் பிறக்கிறது. இவற்றில் கூறப்பட்டுள்ளபடி பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் பதினெட்டு மெய்யெழுத்துக்களுடன் இணைவதன் மூலம் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றது.
தமிழ் உயிர்மெய்யெழுத்துக்கள் (Tamil Uyirmeieluthukkal) மொத்தம் 216.
உயிர் மெய் எழுத்து வகைகள் -Types of tamil uyir mei eluthukkal
உயிர் மெய் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும் அவை
- உயிர்மெய்க் குறில்
- உயிர்மெய் நெடில்
Uyir Mei Ezhuthukal |
உயிர்மெய்க் குறில் – தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள்
Tamil uyir mei eluthukkal-ளோடு உயிர் குறில் இணைந்து உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் குறில் எழுத்து எனப்படும். இந்த எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும். இது மொத்தம் 18 மெய்யெழுத்துகளையும் 7 குறில் எழுத்துக்களையும் கொண்டுள்ளது.
- க் + அ=க
- க் + இ=கி
- க் + உ=கு
- க் + எ=கெ
- க் + ஐ=கை
- க் +ஒ =கொ
- க் + ஔ=கௌ
உயிர்மெய் நெடில் – தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள்
Tamil uyir mei eluthukkal-ளோடு உயிர் நெடில் இணைந்து உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் நெடில் எழுத்து எனப்படும். இந்த எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும். இவற்றில் மொத்தம் 18 மெய்எழுத்துக்கள் 5 நெடில் எழுத்துக்கள் உள்ளது.
- க் +ஆ=கா
- க் + ஈ = கீ
- க் + ஊ=கூ
- க் + ஏ=கே
- க் + ஓ=கோ
உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை? – Tamil Uyir Mei Ezhuthukal
- உயிர் எழுத்துக்கள் -12
- மெய் எழுத்துக்கள் -18
- உயிர்மெய் எழுத்துக்கள் – 12*18 = 216
ஃ | அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஒள |
க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
Read also:
- தமிழ் மெய் எழுத்துக்கள் என்றால் என்ன?
- தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் 7 சிறந்த திருவிழாக்கள்
- கந்த சஷ்டி கவசம் : வாழ்வில் வளம்பெற உதவும் பாடல் வரிகள்
- APJ.அப்துல் கலாமின் பொன்மொழிகள் தமிழ்
- மண் மனம் மாறாத தேனி மாவட்டத்தின் வரலாறு
- பெரும்புகழ் பெற்ற தமிழ்நாட்டின் வரலாறு
- வேலைவாய்ப்பு செய்திகள் 2022
[wptb id=3792]
Visit also: