ரூ. 37,700 – 1,38,500 ஊதியத்தில் TNPSC Forest Apprentice-ல் வேலை | TNPSC Forest Apprentice Velaivaippu seithigal 2022
Velaivaippu seithigal 2022: வேலை தேடும் அன்பர்களே ஒரு நல்ல செய்தி! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது Forest Apprentice உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வனத் துறைப் பணியில் (குரூப்-VI சேவைகள்) வனப் பயிற்சியாளர் பதவிக்காண நேரடி ஆட்சேர்ப்புக்கு 06.09.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
Velaivaippu seithigal 2022-Forest Apprentice TNPSC recruitment |
[wptb id=3532]
காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வனப் பயிற்சியாளர்கள் பதவிக்கு என 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான கல்வி தகுதி:
வனவியலில் இளங்கலை பட்டம் அல்லது UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் அதற்கு இணையான பட்டம் பெற்றிருப்பது அவசியம். அல்லது கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருப்பது அவசியம் ஆகும்.
- Agriculture
- Animal Husbandry and Veterinary Science
- Botany
- Chemistry
- Computer Applications/Computer Science
- Engineering (All Engineering subjects including Agricultural Engineering)
- Environmental Science
- Geology
- Horticulture
- Marine Biology
- Mathematics
- Physics
- Statistics
- Wildlife Biology
- Zoology
பணிக்கான வயது வரம்பு:
TNPSC Forest Apprentice: இப்பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.04.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயது குறைந்தபட்சம் 18 முதல் 37-குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,700 முதல் 1,38,500/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தேர்வு செய்யப்படும் முறையானது மூன்று தொடர்ச்சியான நிலைகளில் நடைபெற உள்ளன.
- Written Examination
- Physical Test (Walking Test)
- Oral Test
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகாக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தினை பார்த்து தகுதியும், திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08.08.2022 முதல் 06.09.2022 வரை விண்ணப்பிக்கவும்.
விண்ணப்ப கட்டணம்:
- பதிவு கட்டணம் – ரூ.150/-
- தேர்வுக் கட்டணம் – ரூ.100/-
TNPSC official site
Read also : Velaivaippu seithigal 2022
To Join => Whatsapp
To Join => Facebook
To Join => Telegram