ரூ. 50,400/- சம்பளத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 | Velaivaippu seithigal 2022

ரூ. 50,400/- சம்பளத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 | Velaivaippu seithigal 2022

Velaivaippu seithigal 2022
Velaivaippu seithigal 2022

Velaivaippu seithigal 2022: வேலை தேடும் அன்பர்களே ஒரு நல்ல செய்தி! விருதுநகர் மாவட்ட, இந்து சமய அறநிலையத்துறையானது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக இருக்கின்ற Jr. Assistant and others, Asst. Electrician, Plumber  ஆகிய பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் போன்றவை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

Velaivaippu seithigal 2022 | TNHRCE Recruitment

[wptb id=3521]

காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal 2022: விருதுநகர் மாவட்டம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில்  உள்ள இளநிலை உதவியாளர், வழக்கு எழுத்தர், வசூல் எழுத்தர், சீட்டு விற்பனையாளர், அலுவலக உதவியாளர், உபகாவல், ஓதுவார் போன்ற காலியாக உள்ள பல்வேறு பணிகள் என மொத்தமாக 57 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான கல்வி தகுதி:

  • பிளம்பர், உதவி மின் பணியாளர் பணிகளுக்காக அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் இப்பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்களாவர்.
  • வரைவளர் பணிக்காக அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் இப்பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்களாவர்.
  • அலுவலக உதவியாளர் பணிக்காக அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்களாவர்.
  • இளநிலை உதவியாளர்கள், வழக்கு எழுத்தர்கள், வசூல் எழுத்தர்கள், சீட்டு விற்பனையாளர்கள், பண்டக காப்பாளர்கள் பணிக்காக அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்களாவர்.
  • மற்ற இதர பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானதாகும்.

பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தேதியின் படி, 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணிக்கு ஏற்றாற்போல் குறைந்தது ரூ. 10,000/- முதல் ரூ. 65,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகாக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். அல்லது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அலுவலக முகவரிக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்ப படிவத்தினை பெற்று அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேரில் சென்று சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய முகவரி

உதவி ஆணையாளர் / செயல் அலுவலர்,

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இருக்கன்குடி,

சாத்தூர் வட்டம்,

விருதுநகர் மாவட்டம் – 626 202

Download Notification

Read also : Velaivaippu seithigal 2022

To Join => Whatsapp

To Join => Facebook 

To Join => Telegram