கணினியில் IP Address-ஐ எப்படி கண்டுபிடிப்பது? | How to find ip address in tamil?

Introduction
How to find ip address in tamil? : IP Address என்பது உங்கள் கணினிக்கான தனிப்பட்ட அடையாளங்காட்டியாகும். அதாவது இன்டர்நெட் புரோட்டோகால் முகவரியின் சுருக்கமாகும். ஒவ்வொரு கணினியும் இந்த பாதுகாப்பு முறையினை கொண்டுள்ளன. உங்கள் கணினி நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, அதற்காண தனி IP முகவரி எனப்படும் நெட்வொர்க்கில் ஒரு முகவரி ஒதுக்கப்படும்.
அதாவது ஒருவர் அனுப்புகின்ற கடிதமானது நமது வீட்டிற்கு சரியாக வந்து சேர்வதற்கு பெயர், சரியான கதவு எண், ஊர் பெயர் போன்றவை அடங்கிய முகவரி தேவையோ அதை போலவே தான் ஒரு நெட்ஒர்க்கில் இயங்கக்கூடிய கணினி போன்ற கருவிகளுக்கு தகவலை அனுப்பவும் பெறவும் முகவரியாக இருப்பது IP Address ஆகும்.
IP Address meaning in tamil ?
- உலகில் தற்போது இணையத்தை பயன்படுத்துகின்ற கணினிகள் அனைத்தும் TCP /IP வழிமுறைகளின் படி மற்ற கணினிகளுடன் தொடர்பு கொள்கின்றது.
- இது ஒரு கணினியையும் அடையாளம் காண்பதற்கு இந்த முறையில் பயன்படுத்தப்படுகின்ற தனித்துவம் வாய்ந்த முகவரி (unique identifier) தான் IP Address ஆகும்.
- உலகில் இன்று இரண்டு முதன்மையான IP Address-கள் பயன்பாட்டில் உள்ளன. IP பதிப்பு 4 (IPv4) மற்றும் IP பதிப்பு 6 (IPv6). இன்னும் மிகவும் பொதுவானது.
- இவை 4 Octets-களில் வெளிப்படுத்தப்படும் 32-பிட் எண்கள், “புள்ளியிடப்பட்ட தசம” குறியீடாக பிரிக்கப்படுகின்றது.
- உங்கள் கணினியில் உள்ள ஒவ்வொரு நெட்வொர்க்கிற்க்கும், அதன் IPv4 மற்றும் IPv6 முகவரிகளைப் பார்கலாம்.
- முதலாவது IPv4 முகவரி புலத்தில் உள்ளது, இரண்டாவது IPv6 முகவரி புலத்தில் சேமிக்கப்படுகிறது.
- நீங்கள் விரும்பும் முகவரிகளை மட்டும் காட்ட இந்தக் Command-ன் மூலம் காட்டப்படும் தரவை வடிகட்ட இந்தக் Command-யில் ஒரு address-ஐ சேர்க்கலாம்.
Two Standards of IP Address
- IPv4
- IPv6
Standard IPv4
IPv4 என்பது 32 Binary எண்களால் (0, 1) உருவாக்கப்படுகின்து. உதாரணமாக 154.31.16.13 (Binary form: 10011010.00011111.00010000.00001101] இந்த IP-ல் 4 எண்கள் dot ஆல் பிரிக்கப்பட்டு இருக்கும். இதன்படி 4 பில்லியன் கணினிகளுக்கு IP Address-ஐ வழங்க முடியும்.
Standard IPv6
தற்போது நாளுக்கு நாள் உலகில் கணினி சார்ந்த கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்ற காரணத்தினால் IPv4 இன் மூலமாக கிடைக்கக்கூடிய 4.3 பில்லியன் IP Address போதாது என்பதனால் IPv6 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 128 பைனரி எண்களால் ( 0 , 1) இது உருவாக்கப்படுகின்றது. உதாரணமாக 2001:cdba:0000:0000:0000:0000:3257:9652.
How to find ip address in tamil?
உங்களுடைய கணினியின் IP address ஐ கண்டுபிடிப்பது எப்படி என்பதை எளிமையாக இங்கு பார்க்கலாம். உங்களுடைய கணினியில் நெட்ஒர்க் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு IP address-ஐ தெறிந்துகொள்வது அவசியமாகும். IP address-ல் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று Local IP address இரண்டாவது External / Public IP address ஆகும்.
IP Address-ஐ எப்படி கண்டுபிடிப்பது? | How to find Local IP address?
ஐபி முகவரி அல்லது இணைய நெறிமுறை முகவரி என்பது கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் முதல் பிரிண்டர்கள், டிவிகள் மற்றும் பிற சாதனங்கள் வரை பிணைய சாதனங்களை அடையாளம் காணவும் கண்டறியவும் நெட்வொர்க்குகளில் பயன்படுத்தப்படும் ஒரு எண் லேபிள் ஆகும். உங்கள் வீட்டு Router அமைக்க அல்லது Network-ல் உள்ள பிற சாதனங்களுடன் இணைக்க வேண்டும். இந்த பதிவில் ஆனால் கணினியின் ஐபி முகவரியை எப்படிப் பார்ப்பது?
Command Prompt- ஐ பயன்படுத்தி உங்கள் IP Address- ஐ எவ்வாறு கண்டுபிடிப்பது?
- உங்களுடைய கணினியில் Local IP address-ஐ தெரிந்துகொள்ள Control panel வழியாக சென்று கண்டறியலாம்.
- இதில் எந்தவகை கணினியாக இருந்தாலும் மிக எளிமையாக Command Prompt வழியாக Local IP address-ஐ கண்டறியலாம்.
- முதலில் Command Prompt-ஐ திறந்து, பின்வரும் கட்டளையை தட்டச்சு செய்து Enter செய்யவும்.
- அதில் ipconfig என்று type செய்து Enter செய்யவும்.

How to find Public IP Address?
- உங்கள் கணிணியின் Public IP Address-ஐ கண்டறிய Online வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்.
- அதற்கு முதலில் Google Chrome-ல் My IP என search செய்யுங்கள் .
- அதில் முதலில் வருகின்ற தரவுகள் தான் உங்களுடைய Public IP Address ஆகும்.

Read also: டிஜிட்டல் சேவை பான் கார்டு Nsdl ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
Suggest : BGMI LATEST UPDATES
To Join => Whatsapp
To Join => Facebook
To Join => Telegram