Post office Fixed deposit vs Recurring deposit
Introduction
- தபால் நிலையத்தில் முதலீடு செய்ய பல வழிகள் உள்ளன. இங்கே நீங்கள் நிலையான வைப்புத்தொகை, அதாவது (Post office fixed deposit) மற்றும் தொடர்ச்சியான வைப்புத்தொகைகளிலும் (Post office recurring deposit) முதலீடு செய்யலாம்.
- இவற்றில் ஏதேனும் ஒன்றை நீண்ட காலமாக முதலீடு செய்ய முயற்சிக்கிறீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
- நீங்கள் ஐந்து ஆண்டுகளாக அஞ்சல் அலுவலகத்தில் நிலையான வைப்புத்தொகை post office fixed deposit) கணக்கை துவங்கி, ஐந்து வருடங்களுக்கு தொடர்ச்சியான வைப்புத்தொகையைச் (post office recurring deposit) செய்தால், இரண்டிலும் எவ்வளவு வருமானம் வழங்கப்படுகிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Read also: Post Office Public Provident Fund Scheme
What is a Post Office Fixed Deposit?
- எதிர்காலம் பற்றி சிந்திக்கும் முதலீட்டாளர்களுக்கு FD கணக்குகள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகைக்கான வட்டி விகிதம் முன்கூட்டியே கணிக்கப்படுகிறது.
- இத்திட்டமானது முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முதிர்ச்சி (Maturity Date)தேதி வரை வழக்கமான Savings Account-ஐ விட அதிகமான வட்டி விகிதத்தினை வழங்குகிறது.
- இந்த திட்டத்தின் அடிப்படையில் நீங்கள் ஒரு முறை மட்டும் தான் பணத்தை போடமுடியும். மெச்சூரிட்டியின் முடிவில் நீங்கள் செலுத்தியுள்ள மொத்த முதலீட்டு தொகையுடன் சேர்த்து குறிப்பிட்ட அளவிலான வட்டி தொகையையும் பெறுவீர்கள்.
- இந்திய அஞ்சல், தபால் அலுவலக FD வட்டி விகிதங்களை 5.50 – 6.70% p.a. 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையிலான சேமிப்பு திட்டத்தை வழங்குகிறது. அஞ்சல் அலுவலக வரி சேமிப்பு FD மீதான வட்டி விகிதம் 6.70% p.a.
- பொது மக்களுக்கு வழங்குகிறது. இந்த FD திட்டங்கள், மத்திய நிதி அமைச்சகத்தின் மூலம் இறையாண்மை உத்தரவாதத்தால் ஆதரிக்கப்படுவதால், வைப்புத்தொகையாளர்களுக்கு மிக உயர்ந்த மூலதனப் பாதுகாப்பையும் வருமான உறுதியையும் வழங்குகின்றன.
- மற்ற சிறு சேமிப்பு திட்டங்களைப் போலவே, இந்த post office fixed deposit திட்டங்களும் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் தேசிய சேமிப்பு நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. இதன் விளைவாக, அஞ்சல் அலுவலக நிலையான வைப்புத்தொகை (PO FD) தேசிய சேமிப்பு நேர வைப்பு என்றும் அறியப்படுகிறது.
- தபால் அலுவலகத்தில் முதலீடு செய்து நல்ல லாபம் பெற வேண்டுமென்றால் முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு செயல்படுவது சிறந்தது. தபால் அலுவலகத்தில் வெறும் ரூ .1000 கூட Fixed Deposit கணக்கு தொடங்க முடியும். அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை.
- இந்திய தபால் துறையின் இணையதளமனா https://www.indiapost.gov.in/ – இல் உள்ள தகவல்களின்படி, 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் சேவைகள் வழங்கப்படுகிறது. 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 5.5% வட்டி வழங்கப்படுகிறது.
- ஐந்து ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்(FIXED DEPOSIT) திட்டத்துக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. எனவே, ஐந்து ஆண்டுகள் வரை ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு தபால் அலுவலகத்தின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் ஒரு நல்ல வரப்பிரசாதமாகும்.
Read Also : Post Office Fixed Deposit Scheme
What is a Post office recurring deposit?
- Post office recurring deposit எனப்படும் தொடர் வைப்பு தொகை திட்டமானது மக்களிடையே சேமிப்பை தூண்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
- ஒரு வங்கியின் அல்லது நிதி நிறுவனத்தின் தொடர் வைப்பு தொகை திட்டத்தில் சேரும் ஒருவர் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தங்களது RD கணக்கில் செலுத்தி கொண்டே வரலாம்.
- முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் தாங்கள் விரும்பும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய மற்றும் சேமிக்கும் நெகிழ்வுத்தன்மையை ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் தொடர் வைப்புத்தொகை வழங்குகிறது. இதன் வட்டி விகிதம் பொதுவாக 5.00% – 7.85% வரை இருக்கும்.
- இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டம் உட்பட 9 சேமிப்புத் திட்டங்களை அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது.
- தபால் அலுவலகத்தில் கொடுக்கப்படும் தொடர் வைப்புத்தொகையானது இடைக்கால சேமிப்புத்திட்டமாக கொடுக்கப்படுகிறது.
- இந்த திட்டத்தின் மூலம் டெபாசிட் செய்பவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு தங்கள் முதலீடுகளை டெபாசிட் செய்வார்கள்.
- தொடர் வைப்புத்தொகைகள் சந்தையைச் சார்ந்து இல்லாததால் ஆபத்து இல்லாதவை என நம்பப்படுகிறது.
- குறைந்த ரிஸ்க் முதலீடுகளை விரும்பும் முதலீட்டாளர்களுக்கும், முதல் முறையாக முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதல் முறையாக ஒரு திட்டத்தில் டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்களுக்கும் தொடர் வைப்புத்தொகை சிறந்தது.
- தொடர் வைப்புத் திட்டம், குறிப்பிட்ட கால இடைவெளியில், வட்டி திரட்டப்பட்டு, காலாண்டுக்கு ஒருமுறை கூட்டுத்தொகையுடன் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
- தபால் அலுவலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ரெகரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில், ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இதில் அதிகபட்ச முதலீடு செய்ய வரம்புகள் இல்லை.
- Post office recurring deposit திட்டம் தற்போது ஆண்டுக்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு பிறகு, தேவைப்பட்டால் டெபாசிட் கணக்கை நீட்டித்துக்கொள்ளலாம்.
Read Also : Post Office Recurring Deposit Scheme
Post Office Fixed Deposit vs Recurring deposit: Which is Better?
சிறப்பம்சங்கள் | தொடர் வைப்பு (RECURRING DEPOSIT) |
நிலையான வைப்பு (FIXED DEPOSIT) |
---|---|---|
முதலீட்டின் வரைமுறை | இதில் வாடிக்கையாளர் நீண்ட காலத்திற்கு சிறிய தொகையை மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகைகளை டெபாசிட் செய்ய முடியும். | இதில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தொகை டெபாசிட் செய்யப்படுகிறது. அதாவது ஒரே ஒரு முறை தான் டெபாசிட் செய்ய முடியும். |
முதலீட்டின் காலம் | குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யமுடியும். | குறைந்தபட்சம் 3 மாதங்களில் இருந்து அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யமுடியும். |
வட்டி | ஆனால் முதலிலேயே நீங்கள் மொத்த தொகையையும் செலுத்து விடுவதால் தீர்மானிக்கப்பட்ட வட்டியை பெறமுடியும். | இதில் மாதாமாதம் நீங்கள் தொகையை செலுத்துவதால் திட்டத்தின் முடிவில் அதற்கேற்ப வட்டியை பெற முடியும். |
வரிச்சலுகை | RD-ஐ பொறுத்த வரை, TDS செலுத்துவது கட்டாயமில்லை, ஆனால் தனிநபர் ITR (வருமான வரிக் கணக்கு) தாக்கல் செய்யும் போது பெற்ற வட்டியைக் குறிப்பிட வேண்டும். | FD-ல் டெபாசிட் தொகைக்கு கிடைக்கும் வட்டி குறிப்பிட்ட தொகைக்கும் மேல் இருந்தால் TDS செலுத்த வேண்டும். |